பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


ரிக்க மண்ணிலே விளைகின்றது. The hundred என்ற இணையற்ற நூலின் ஆசிரியர் டாக்டர் மைக்கேல் ஹார்ட்டிடம் நூலாசிரியர் உரையாடிக் கொண்டிருக்கும்போது "பெருமானார்(சல்)அவர்கள் மட்டுமே அகத்தையும், புறத்தையும் பற்றி ஒருசேர அதிகம் போதித்தவர். அதிகம் அவர்களின் சிந்தனையும் செயலும் அறிவியல் போக்கிலானது. பெருமானார் முதற்கொண்டு 1200 ஆண்டு காலம் இஸ்லாமியர் முயன்று உழைத்து இன்றைய அறிவியலின் அனைத்துப் பிரிவுகளின் அடிப்படைகளையும் அழுத்தமாக அமைத்துச் சென்றுள்ளனர். இவ்வரலாற்றையும் நம் முன்னோரே இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு மூலகாரணம் என்பதையும் உணராதிருப்பது விந்தை" என்று கேட்ட அளவில், சிந்தனை வயப்பட்ட மணவையார், அண்ணலெம் பெருமானார்(சல்) அவர்களின் அறிவியல் போக்கை ஆராய முற்பட்டு எழுந்ததே இந்நூல் ஆகும்.

35 ஆண்டுக்கால அறிவியல் தமிழ்ப்பணிப் பட்டறிவினால் ஆசிரியர், இஸ்லாமிய அறிவியலாரின் சாதனைகளை விளக்கப் பெருநூல் எழுதத் தலைப்பட்டாராம். முகாந்திரமாக இச்சிறுநூலை ஆழமான அடிப்படையில் அறிமுகமாக எழுதுகின்றார். இவற்றுக்கெல்லாம் தலையாய பெருமை பூண்டவர்கள் நம் அண்ணலெம் பெருமானார் (சல்) அவர்களே. மனிதர்கள் எப்போதும் பிறக்கின்றார்கள். மகான்களோ எப்போதோ அவதரிக்கின்றார்கள்; மனிதர்கள் எப்போதும் சாகின்றார்கள்; மகான்களோ எப்போதும் சாவதில்லை. அப்படிப் பிறவாமல் பிறந்து இறவாமல் வாழ்பவரே நம் இன்ப அன்பு நபி(சல்) அவர்கள். தம் வாழ்க்கை வாயிலாக அவர்கள் புகட்டிய படிப்பினைகள், அறிவியல் பாடங்கள், முன்னோடித் தத்துவங்கள் அவை உலகமெங்கும் பின்னாளில் வெளிப்பட்டு மிளிர்ந்து வளர்ந்து