உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் வா சா. பானுநூர்மைதீன்

49


அரிய கண்டுபிடிப்புகளுக்கு ஆளான தன்மை, இவற்றை நூல் நெடுக ஆசிரியர் குறித்துச் செல்கின்றார்.

நூல் தரும் தகவல்கள் ஏராளம்

கல்வி இஸ்லாத்தில் மிகவும் வற்புறத்தப்பட்டது; கல்வி வளர்த்த நாயகம்(சல்) அவர்கள் அன்றையக் கலைத் தாயகமான சீனா செல்லப் பணித்ததும் விளக்குவர்; எகிப்தில் 1200 ஆம் ஆண்டிலேயே அல்அஸ்ஹர் பல்கழைக்கழகம் நிறுவிய பெருமை: கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் அமைந்த சாக்ரடீஸ் தர்கா (ஒரு வேளை அறிவியல் ஞானியான சாக்ரடீஸ், பிளேட்டோ கிரேக்க நாடுபெற்ற இறை தூதர்களாக இருக்கலாமோ எனக் கருதி தர்கா அமைத்தல்) நினைவுச் சின்னமாகப் போற்றப்படும் இத் தர்காக்கள்; உலக அறிவியல் மொழியான அரபி இருந்த பான்மை; அறிவியலின் தாயான கணிதத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்த இஸ்லாமியர், கிரேக்க மொழியிலிருந்த அனைத்து மருத்துவ நூல்களையும் மொழி பெயர்த்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஹானைன் இப்னு இஸ்ஹாக் அல் இயாதி, எண் குறியீடுகளின் தாயகமாக இந்தியா இருந்த நிலை; x = எக்ஸ், சைபர், ஸீரோ போன்ற கணிதவியல் கலைச்சொற்கள் அரபிச் சொற்களே; அல்ஜீப்ரா, அல்கோரிதம், திரிகோண மிதி, வடிவகணிதம், யூக்ளிடின் கணிதவியல் கோட்பாடு, எந்திர நுட்பக் கருவிகள் உருவாக்கம்; ஒலி, ஒளிவேகம், சக்கரம் கண்டுபிடிப்பு, நீர்ச்சுழல் எந்திரக் கருவி, காற்று எந்திரக்கருவி, இருசு, நெம்புகோல், கப்பித்தான், ஊசல், பெண்டுலம், நீர்க்கடிகாரம், சந்திரனின் இயக்கம், முதல் வானவியல் ஆய்வுக்கூடம், முதல் பூகோளப்படம்; துல்லிய நாட்காட்டி; ஈர்ப்பு விசை; ஏவுகணை, அறுவை மருத்துவம், மயக்க மருந்து போன்ற எண்ணரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர் இஸ்லாமியரே என்பதை