பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


முயற்சி கருதியே இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கதை கட்டப்பட்டது. அந்தக் கொடிய பண்டைக்காலத்தில் அவர் பெற்ற காயங்களும் ஊமை; அவர்க்கு வழங்கப்பட்ட நியாயங்களும் ஊமை, அந்த நேரத் தாக்குதல்களில் பொறுமை மீறிப்போய் அவர்கள் போர்த்தடுப்பு, தற்காப்பில் ஈடுபடவே இப்பொய்ப்பிரசாரம் நிலையாக நிறுத்தப்பட்டது. இதனை ஆசிரியர் நிரலான சான்றுகள் வழி காட்டுவது தான் சிறப்பாக உள்ளது.

இஸ்லாம் இந்திய மண்ணில் பிறந்ததாயினும் இந்த தேசத்தை ஈர்க்க என்ன காரணம் என்பதைச் சுட்டவரும் ஆசிரியர் விளக்கமும் அருமை 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற ஏகத்வக் கொள்கையும் சகோதர, சமத்துவமும் சங்ககாலம் தொட்டு முழங்கிவர, அவை மங்கிப்போன காலக்கட்டத்தில் இஸ்லாம் அக்கொள்கைகளையே முழங்கிவர, இழந்த செல்வத்தை இருகை ஏந்தி ஏற்க வந்ததுபோல் தமிழகம் பெருவிருப்போடு இஸ்லாத்தை ஏற்று இன்தமிழ் இலக்கியங்கள் பிறக்கக் களம் வகுத்தது என ஆசிரியர் கணிப்பது, படிப்பவரின் கண்கள் பனிக்கின்ற அனுபவமாகிறது.

600 ஆண்டுக் காலம் இந்தியாவை இஸ்லாமிய மன்னர்கள் ஆண்டாலும், அவர் நாட்டாட்சி மட்டுமே கருதினரே தவிர, இஸ்லாமிய நெறிபரப்பும் சிந்தை ஏதுமில்லை அவர்க்கு. அப்படியிருக்க வாளால் எப்படிப் பரவும் இஸ்லாம்? ஒருசிலர் மாலிக்காபூர், கஜினியின் படையெடுப்புகளைச் சான்றாகக் கூறுவர். அதுகூட வரலாற்றை ஆழ்ந்து கண்டால் நிலைமையே விபரீதமாக உள்ளது. மாலிக்காபூர் தீவிரப் படையெடுப்பு நிகழ்த்தி, தமிழகம் நோக்கி வந்த காலை, இங்குள்ள இஸ்லாமியரைத் தன்பால் இணைந்துக்