பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

மணவையாரின இஸ்லாமிய இலக்கியப் பணி


முயற்சி. இந்நூல் பிறந்த காரணங்கள் கட்டுரைத் தலைப்பிலேயே தெரியவருகின்றது, ஒவ்வொரு இஸ்லாமியச் சிறப்புப் பெருநாட்களின்போது. அவற்றின் முக்கியத்துவம் குறித்து பத்திரிகைகளுக்கு - தினமணி - ஓம் சக்தி - போன்ற இதழ்களுக்கு எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பிற சமயத்தார் சரிவர இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்; தவறாகப் புரிந்து கொண்டு இருப்பதே இன்று எழும் பல பிரச்சினைகளுக்குக் காரணம் என்று கூறவே எழுந்தது இந்நூல் என்கிறார் மணவையார்.

பெருமானார் (சல்) அவர்களைப் பற்றிய 6 கட்டுரைகள், ரமலான் பற்றிய 5 கட்டுரைகள், ஹஜ் பெருநாள் பற்றிய 4 கட்டுரைகள், முஹர்ரம் பற்றிய 4 கட்டுரைகள் பொதுவான 3 இஸ்லாமியக் கட்டுரைகள் அடங்கப்பெற்ற நூல். நூலுக்கு அமைவான அணிந்துரையை, வாழ்த்துரையை வழங்கிய பெருமகன்கள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும், பேராயர். எஸ்றா சற்குணம் அவர்களும், மல்லானா அப்துல் வஹ்ஹாப், தினமணி ஆசிரியர் திரு மாலனும் ஆவர்.

தினமணிக்கு ஒரு முறை "பெருமானாரின் பிற சமயச் கண்ணோட்டம்" என்ற தலைப்பில் ஆசிரியர் அனுப்பிய கட்டுரை, ஐராவதம் மகாதேவன், பி. பெருமாள் போன்றோரால் பெரிதும் பாராட்டப்பட்டு, தொலைபேசி, கடிதங்கள் வழி வாழ்த்திய போது அவர்கள் எண்ணங்களை ஆசிரியர் நினைவு கூர்கின்றார். அன்னார், இஸ்லாமானது. இதுகாறும் தங்கள் எண்ணப் போக்களவில், பிற மதங்களை அழிக்கவந்த சமயம் எனக் கருதியது தவறானது. இது அப்படிப்பட்ட மார்க்கம் இல்லை; பிறமதங்களை மதிப்பதே இஸ்லாத்தின் அடிப்படை என்றுணர்ந்து, இஸ்லாம் மதத்தின் மீதே மதிப்பு ஏற்பட்டு, சமூக நிலைமை சமநீதி