பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


பெருமை தெரிந்து உலகோர் அனைவரும் தாமே அதை நோக்கித் தளர்நடையிட்டு ஆனால் உறுதியாய் முன்னேறி வரும் காலக்கட்டமிது. பண்டைய அருமையெல்லாம் இன்று உலகெங்கும் பரவலாகப் பலரால் போற்றப்படும் காலம். இங்கிலாந்தில், 'Back to Basics' என்ற எழுச்சியும் அமெரிக்காவில் ‘Returning to the traditional homely life' என்ற மலர்ச்சியும் ஏற்படும் காலமிது. இத்தகைய நாளிலே, பண்டைவளம் செறிந்த பன்னயக் கலிமா நிறைந்த சொன்னத் தொகுப்பான திருக்குர்ஆனின் செவ்வியல் அடிப்படையை உணர்ந்தும் இறையோன் என்றால் ஈடு இணை அவனுக்கில்லை; தூதரே முகம்மது (சல்) என்ற அடிப்படையை உளங்கொண்டால், இவ்வுலகம் பொல்லாத உள்ளத்துயர் பூரணமாய்ப் போய்விடும், நில்லாது சலனங்கள் நெடுந்தூரம் ஓடிவிடும் என நிரூபிக்கின்றார். உலகிலேயே உயர்ந்த மானிடப் படைப்பினம் வெறும் நடைப் பிணம் ஆவதுண்டோ ? அதற்கென ஆணும் பெண்ணும் போட்டியிடல் வேண்டுமோ? தன்னைத்தான் சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ளச் செம்மைப் பாதையைப் புரிந்து நடந்து வாருங்கள் என்பதை விளக்குவது போல் அமைந்த கட்டுரைகள் இங்கே திரண்டுள்ளன.

அவர்தம் எழுத்துக் கோலத்தின் ஆளுமையையும் அதனை ஆண்டு சிறந்த அன்னாரின் பெருமையையும் காண்பதற்குப் பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களின் வாழ்ந்துரையே போதும். “ஆசிரியர் நாடு போற்றும் நல்ல எழுத்தாளர்; இஸ்லாமியச் சமுதாயத்தின் பெரும் சிந்தனையாளர்; தொய்வற்ற ஆய்வாளர்; இயற்பியல், பொறியியல், விஞ்ஞானம், இறையியல், இலக்கியம் ஆகிய எல்லாத் துறையிலும் வித்தகர். அவர்தம் படைப்பு - கல்லாதார்க்கு ஒரு கலைக் களஞ்சியம், கற்றோர்களுக்குத் தெளிவுரை; மற்றவர்க்கு அறிவுரை. பல நூறு புதுவார்த்தைகளைத் தமிழ் <span title="உலகுக்கு">உல