டாக்டர். வா சா. பானு நூா்மைதீன்
61
குக்கு உற்பத்திசெய்து விநியோகம் செய்து வரும் ஓர் அறிவுத் தொழிற்பேட்டை என்றுரைத்திருப்பதே சிகரமான பாராட்டு.
III. களஞ்சியம்
5. இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் (1991)
மணவையாரின் களஞ்சியப்பணி குறித்துத் தனியே ஆய்வு செய்யப்பட்டாலும், இஸ்லாமிய இலக்கியப்பணி என்ற அளவில் இந்நூலும் பங்கேற்பதால் ஒரு சில கருத்துக்களைக் கூற கடமைப்பட்டுள்ளோம்.
மனிதன் தான் அறிந்த அறிவுகள் அனைத்தையும் ஒரே நூலில் பொதியவைத்து மக்களினம் பயன் அடைய வழங்க வேண்டும் என்ற நன்னோக்கத்தின் அடிப்படையில் விளைந்ததே கலைக்களஞ்சியம் என்பதைப் பன்னுாலாசிரியர் அப்துற்-ரஹீம் போன்றவர் கூறுவர். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே உலகெங்கும் கலைக்களஞ்சியம் எழுதும் பணி தொடங்கிவிட்டது. எனினும் தமிழில் பதினாறாம் நூற்றாண்டு முதற் கொண்டுதான் இது தீவிரமடைந்தது. அதுவரை தமிழில் இருந்தவை நிகண்டுகள்தாம். 1594ம் ஆண்டில் இரேவணச்சித்தர் இயற்றிய அகராதி நிகண்டே தமிழின் முதல் அகர முதலி எனக் கூறுவர். பின்பு அகரமுதலாகச் சொற்களை வகுத்துக்கூறிப் பொருள் கூறும் அகராதிகளை முதன் முதலாக இயற்றிய பெருமை வீரமாமுனிவருக்கே உரியது. பின்னர் எழுந்ததே, அரிய ஆழ்ந்த பொருளை, செய்திகளைக் கடல் போலத் திரட்டித் தந்த கலைக்களஞ்சியங்கள்.
இதைப் பல்பொருள்விளக்க நூல் எனப் பாராட்டிப் பெருமை சேர்த்தனர். சீனர்களே இதற்கு முன்னோடிகள். சீனத்தில் 11,000 தொகுதிகள் படைத்து, அழிந்தது போக