பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


இன்று எஞ்சிய தொகுதிகளை 5020 தொகுதிகளே உள்ளன. கவிதையிலும் களஞ்சியங்கள் உலக அரங்கில் தோன்றினாலும். உரைநடையே உகந்த வடிவெனப் பெருகி வந்தன. இஸ்லாமிய இலக்கியக் களஞ்சியம் பத்துப்பன்னிரண்டு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே அரபிமொழி முதலாகப் பல மொழிகளில் பிறந்தாலும், தமிழில் இருபது ஆண்டுகட்கு முன்புதான் வெளியாகியது. ஆதம்(அலை) அவர்கள் காலம் முதலாக இன்றுவரை உலகில் பரவிய மார்க்கச் செய்திகள், இஸ்லாமிய நாடு, நகரங்கள் பற்றிய முக்கிய, விரிந்த செய்திகள் இடம் பெறுகின்றன. வித்திட்ட பெருமகனார் எம்.ஆர்.எம். அப்துற்-ரஹீம் அவர்கள், மூன்று தொகுதிகளாக இதனை வெளியிட்டு அருந்தொண்டாற்றினார்கள். அன்னாருக்கே இக்களஞ்சிய நூலைக் காணிக்கையாக்கிக் கையடக்கக் களஞ்சியமாகச் சிறுவர்களுக்கென உருவாக்கிய தோடல்லாது, இஸ்லாமியரல்லாதவர்க்கும் இது ஓர் எளிய ஆனால் ஆழ்ந்த பொருள்தரும் தகவல்களஞ்சியமாயுள்ளது.

ஆசிரியரின் கருத்தே எல்லாத்தரப்பினரும் இஸ்லாத்தின் நேரிய அடிப்படையைச் சீரிய முறையில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதேதான். இந்தியாவிற்கு வருகை தந்த மேலைநாட்டார் - குறிப்பாக. வீரமாமுனிவர், வின்ஸ்லோ பாதிரியார் போன்ற கிறிஸ்துவர்கள் அகராதிக் கலைக்கு அரும்பணியாற்றியது போன்றே மணவையாரும் இன்று களஞ்சியத்துறையில் திருப்புமுனை படைத்து வருகின்றார். இளையர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம், மருத்துவ அறிவியல் தொழில் நுட்பக் கலைக்களஞ்சிய அகராதி. இளைஞர் அறிவியல் களஞ்சியம், அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் (இருபாகங்கள்) மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், சிறுவர் கலைக்களஞ்சியம் என்ற எழு படைப்புகளைப் படைத்துப் பெரும்பணி ஆற்றியுள்ளார் இவரைக் 'களஞ்சியக் கருவூலம்’ என்ற தகுதி மிகுதியுடன் விளித்து