பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். வா.சா. பானு நூா்மைதீன்

67


அன்பே பொருளாய், அறிவே காவியப் பயனாய்ப் பாடிய உமறு எனப் பாராட்டிக் காப்பியப் பண்புகள் குறித்துச் காட்டிய மயிலை, சீனி வேங்கடசாமியின் கட்டுரை; சீறாவின் உருவக, உள்ளடக்கம், உணர்த்தும் முறை குறித்தும் செய்திகளை உணர்த்தி "இடையிடையே வரலாறு தலைக் காட்டினாலும் அது காப்பிய சாரத்துக்குக் கரை என்று கருதுக; கறை என்று கருதுதல் ஆகாது; குறை என்று குமுறுதல் கூடாது" என உரைக்கும். க.ப. அறவாணரின் கட்டுரை; சீறாவில் தமிழ்ப் பண்பாடுகள் மலிந்தமை பற்றிச் சிலம்பொலியாரின் கட்டுரை; பிற கவிஞருடன் ஒப்பு நோக்கி சீறாவின் இயற்கை வருணனை குறித்து விளக்கும் சி.பா. அவர்களின் கட்டுரை, சீறாவில் பெண்மை நலம் மேம்பாட்டுத் தன்மை குறித்து டாக்டர் கிருஷ்ணா சஞ்சீவி வழங்கிய நெடிய கட்டுரை சீறாவில் வரலாற்றுக் குறிப்புகள் பற்றியும் அரபு, பாரசீகச் சொற்கள் பற்றிய டாக்டர் உவைஸ் அவர்களின் இரு ஆழமான கட்டுரைகள்; சீறாவும் சின்னச் சீறாவும் பற்றிய நாஞ்சில் நன்மொழியோன் அவர்களின் அரிய கட்டுரை உவமை இன்பம் விரவிக்கிடந்த பெருமையை விளக்கும் பேராசிரியர் நயினார் முகம்மது அவர்களின் தனித்த கட்டுரை; சீறாவில் இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் இடம்பெற்ற பாவிகப் பண்பைக் குறிக்கும் பஷீர் அவர்களின் கட்டுரை எனப் பல அரிய தகவல்களைத் திரட்டித் தந்த செறிவான தொகுப்பு இது.

நூலுக்குச் சிறந்த முன்னுரைகளை வழங்கியப் பெருந்தகையாளர் மூவர்-சிராஜுல் மில்லத் அவர்கள், எஸ்.எம். சுலைமான் அவர்கள், மெளலவி எம். அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஆவர். வரலாற்று வரம்பிலிருந்து வழுவாமலும் புனைவுகளை முற்றாகப் புறக்கணிக்காமலும் படைக்கப்பட்டது உமறுவின் காப்பியம்; தெ.பொ.மீ அவர்களின் பாராட்டு; எம்.எம் இஸ்மாயில் அவர்களின் புகழ்மொழி;