68
மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி
குடத்துள் விளக்காகவே இன்னுமிருக்கும் சீறாவை வெளிக் கொணரவேண்டிய பல முயற்சிகள்; உமறுவின், சீதக்காதியின், அத்தருணத்தில் வாழ்ந்த சமகாலப் புலவர்களின் தகுதி குறித்தும், மனிதகுலத்தின் தகைமை குறித்தும் எழுதிய அவர்கள் பான்மை குறித்தும், சீறாவின் சொன்னயம் குறித்தும் எழுதிய அன்னார்களின் முன்னுரைகள் பொன்னு ரைகளே. 'அழகுதமிழ் உமறு பழகுதமிழ்ச் சீறா ஆழப்பயில அகமினிக்கும் பொங்கு சுவை, 'சந்தமும் தமிழ்த் தேறுங் கல்வித் தலைவர் மகிழ் உமறு' என்றெல்லாம் பாராட்டப் பெறும் தகுதிமிகுதி மிக்கவொரு படைப்பினைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும் சரியானதொரு முறையில்வேளையில் அடையாளம் காட்டிய மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி பெரிதும் போற்றத்தக்கது. இஸ்லாமியத் தாக்கம், மக்களின் மனித, நல்லிணக்கம் கூடிய உணர்வுக்குச் சான்றாக இப்பணி அமைவதை எப்படிப் பாராட்டினாலும் தகும்.
7. தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள் (1980)
வற்றாமல் நீரை வாரிவாரிக் கொடுப்பது ஊற்று. இது குடிக்கும் நீருக்கு மட்டுமல்ல; குறிக்கோளைத் தாங்கி நிற்கும் இலக்கியங்களுக்கும் பொருந்தும். ஊற்றுப் பெருக்காலே உலகூட்டும் நீரூற்றுப் போல் நல்லுணர்வுப் பெருக்காலே வளம் சிறக்கும் இலக்கிய ஊற்று, கோடை நீடிய போதும், வேனில் விளக்கும்போதும் அடையாது சுரந்திடும் ஜீவிய ஊற்றுப் போன்ற பெற்றி பெற்றதே ஒழுக்க அடிப்படையில் விளைந்த இஸ்லாமிய இலக்கியங்கள். அந்த வரிசையில் விளைந்ததே இந்நூல் .
இந்நூலின் சிறப்பான அங்கமே என்னவெனில், மதுரைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்