பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


வற்றை எடுத்துரைத்துச் சிகரமாக, "அறிந்து கொள்ள வேண்டிய நல்ல கூறுகளை ஓர் இனத்துக்கோ ஒரு மதத்துக்கோ உரியதுபோல் தோன்றுவதையெல்லாம் உலகுக்கே பொதுவானதாகக் காட்டுங்கள்" எனக் கூறுகின்றார். பண்டை நாளில் ஞானவான்கள் இப்படி ஒருமுகப்பட்ட சிந்தையராகி வாழ்ந்தனர். அன்னை தெரஸா, ஜலாலுத்தீன் ரூமீ, நம்மாழ்வார், மணிவாசகர், பதினெண்சித்தர் போன்றோர் அதில் சிலர். மணவையாரும் அந்தப் பரம்பரையின் மற்றுமொரு கண் என இத்தொகுப்பு நூல் காட்டுவதாகக் குறிக்கின்றார்.

மணவையார் தம் வாழ்வையும், வருவாயையும் தமிழுக்கும் உலகுக்கும் பயன்பட ஒரு பெரும்பங்கை ஒதுக்கி வாழ்வதையும், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராயிருந்த காலத்திலேயே 'நச்சினார்க்கினியர்' என்ற பெயரோடு உலவிய பொருத்தத்தையும் நினைவு கூர்ந்து இத்தொகுப்பு நூலின் அரிய செய்திகளை மனந்திறந்து பாராட்டுகின்றார்.

டாக்டர் எம்.எம். உவைஸ் அவர்களின் வாழ்த்துரையும் பல செய்திகள் தாங்கிவரும். அவர்தம் வாழ்த்துரையிலேயே அரிய மெய்ஞ்ஞான இலக்கியப் பட்டியலையும் வெளியிடும் அரிய கட்டுரையாகின்றது. மேலும் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள், நெல்லை மெளலவி அபுல்ஹஸன் ஷாதலி சாகிப், மெளலவி. அப்துல் பத்தாஹ் பாக்கவி போன்றோரின் மதிப்புரைகளுடன் மலர்ந்துள்ளது. இத்தொகுப்பு இஸ்லாமிய சமயத்தின் மெய்ஞ்ஞானப் பிழிவின் திரட்டாகவே உள்ளது. மொத்தம் 11 கட்டுரைகள் இத்தொகுப்பில் சேர்ந்துள்ளன. சூஃபித்துவ தோற்றம் பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி சுலைமான் பண்பும், பண்பாடும் என்ற கட்டுரை தருகின்றார். தக்கலை பஷீர் அவர்களின் 3 <span title="கட்டுரைகள்,">கட்டு