பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டா். வா.சா பானு நூா்மைதீன்

71


ரைகள், பட்டியல்கள், டாக்டர் மாணிக்கவாசகம் அவர்களின் சித்தர், சூஃபியர் பாடல்களின் ஒற்றுமை விளக்கும் கட்டுரை; பசுலு முகையதீன் அவர்களின் கோட்டாறு தந்த ஞானியர் பற்றிய கட்டுரை, கவிஞர் அப்துல் ரகுமானின் சுலைமான் ஐ.ஏ.எஸ்., அவர்களின் கட்டுரைகள், பீர் முகம்மது அப்பாபற்றி கா.முகமது பாரூக், விஞ்ஞான நோக்கில் மெய்ஞ்ஞானியர் பற்றிய ஹைதர் அலி, சூஃபி இலக்கியப் பதிப்புகள், உரைகள் பற்றி இரா.முத்துக் குமாரசாமி கட்டுரைகள் மதிப்பிடற்குரியவை.

இத்தகு சூஃபிப் பெருமக்களின் ஞானப்புதையல்களைத் தேடியெடுத்த பல திறப்பட்டச் சொல்லேருழவர்களைத் திரட்டித் தொகுப்பித்த இந்த ஏர்உழவனை மணவையாரை எப்படிப் பாராட்டுவது? அத்திரட்டில் சிதறிய அறிவரிய சாலிச் செந்நெல் மணிக் கருத்துகள் பல காணல் நன்று.

தமிழகத்திலும் ஈழத்திலும் வாழ்ந்து 65-க்கும் மேற்பட்ட மெய்ஞ்ஞானிகளின் இருப்பு; இறைவனை நேசிப்பதுபோல் நடிப்பதைவிட அவனிடம் பயபக்திபூண்டு அவனுடைய குழந்தைகளாகிய மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும்; இஸ்லாமியரின் ஏகதெய்வக் கொள்கையை வலியுறுத்தித் தமிழகச் சித்தர்கள் பாடுபட்டுவந்தனர்; சூஃபி என்றால் போபாஸ், அறிவாளி, கம்பளி ஆடை அணிந்தவர் (அக்கால ஆடம்பரத்தை உணர்த்த டாக்கா மஸ்லின் போன்ற மெல்லிய ஆடைஇருந்ததால், ஆடம்பரம் பகட்டு தவிர்த்துக் கரடுமுரடான கம்பளி ஆடையை அணிந்தனர் சூஃபியாக்கள்) பீர்; மிஸ்டிக், நபி(சல்) அவர்களின் திண்ணைத் தோழர்கள்; சபா என்ற சொல் குறித்தத் தூய்மையாளர்கள், அல்லாஹ்வுடன் நெருக்கமுடையோர்; சுயக்கட்டுப்பாடுடையார்; ஆத்மார்ப்பணம்; தூய்மை