பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணவையாரின் அரும்பணியைப்
பாராட்டிப் பாட பாரதியார்
இன்றில்லையே!

"சென்றிடுவீர் திக்கெங்கும் திரட்டிவந்தே
செந்தமிழைச் செழிக்க வைப்பீர் என்று சொன்னோன்
இன்றிருந்தால் எங்கள் மணவை முஸ்தபா
இயற்றிவரும் புது ஆக்கம் கண்டு போற்றி
வெற்றி கொண்டே புது இயல்கள் அனைத்தையுந்தான்
வேகமுடன் தமிழ் வளரும் நின்னால் ! என்றே
மன்றினிலே உயர்த்திவைத்துப் பாடி நிற்பான்
வரகவிஞன் பாரதியும் இன்றில்லையே!”

- பெருங்கவிஞர் தெசிணியார்