பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


யாளர்கள்; என்ற பல பொருள் காட்டுவது; பெரும்பான்மை மக்களுக்குத் தெரியும் எளிய, இனிய சொல்லை ஆண்டு அற்புத ஞான இலக்கியம் படைத்தனர்.

திருக்குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் ஒத்தக் கருத்துக்களைச் சித்தர்களான சூஃபிகள் வெளிப்படுத்துவர். இவ்விரண்டை மீறிச் செல்லும் ஞானம் இஸ்லாமிய ஞானமன்று என்ற கருத்து நாட்டம்; "நான் மறைந்த பொக்கிஷமாக இருந்தேன்; நான் அறியப்பட விரும்பினேன்; ஆகவே படைப்பினம் படைத்தேன்." எனும் ஹதீஸே சான்று. படைப்பின் தோற்றமே மெய்ஞ்ஞானத்தின் தோற்றமாகும்; தன்னை அறிவதன் மூலம் இறைவனை அடைவதே சூஃபித்துவம்; சூஃபித்துவக் கலைச் சொற்கள் தோன்றத் தொடங்கியது ஹஸ்ரத் ஹஸன் பஸ்ரி (ரலி) அவர்களின் காலத்திலிருந்துதான்; நிறைவு அடைந்தது கெளதுல் அஃலம் ஜீலானி (ரலி) அவர்களால் தாம்; ஷரீஅத்தின் வணக்கம் உடம்பைக் கொண்டும், தரீக்கத்தின் வணக்கம் அகத்தைக் கொண்டும், ஹகீக்கத்தின் வணக்கம் ஆத்மாவைக் கொண்டும், மஃரிபத்தின் வணக்கம் அல்லாஹ்வின் தரிசனம் கொண்டும் நிகழ்த்தப் பெறும்; சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் படித்தரங்களுடன் மேற்கூறிய நான்கு நெறியும் ஒப்புநோக்க வல்லது என்ற கருத்துகள் நுால் நெடுக அணிவகுக்கின்றன.

மேலும்-உயர்ந்த படித்தரங்களைக் கடந்த எந்த சூஃபியும் ஷரீயத்தின் மூலாதாரச் சட்டங்களைப் புறக்கணித்து விடக்கூடாது; சூஃபித்துவம் இந்தியாவிற்கு வெளியில் பிறந்திருந்தாலும், இந்தியாவில் மகத்தான வெற்றியைக் காணக்காரணம் மக்களின் சூஃபியாக்களின் மனோநிலை, நற்பண்பு, நல்லெண்ணம்; ஒரு புறம் இஸ்லாமிய ஞானப்பாதைகளை ஒற்றுமை உண்டாக்குதலும் அவர்களுக்கு ஒரு