பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


அமைந்த காரணத்தை தேடியலைந்த மஸ்தான் போன்ற ஞானியர்க்கு விஞ்ஞான நோக்கில்லை என்று கூறலாகுமா என்ற கருத்துகள், சூஃபி, மஸ்தான், பக்கீறு என்பார் யார் போன்ற எண்ணரிய தகவல்கள் நூலெங்கும் காணப்படுகின்றன.

கட்டுரைகளில் ஏற்பட்டத் தவறுகளையும் அணிந்துரை வழங்கியோர் சுட்டிக்காட்டியது, அதைத் தவிர்க்காமல் ஆசிரியர் வெளியிட்டது, இஸ்லாமிய இலக்கியத் தற்காப்பு முயற்சிகள் என்றே அறிய வேண்டும். சான்றாக தரீக்கத் பற்றிக் கூறும்போது, "மெய்ஞ்ஞான உரமுடையார்க்குப் புறச்சடங்குகள் (தொழுகை போன்ற) அகன்று விடும்" என்ற கட்டுரைத் தொடருக்கு, இது இஸ்லாமிய மெய்ஞ்ஞானத்திற்கு உகந்ததல்ல என்றுரைத்து, இறுதிப் படித்தரமான மஃரிபத்தை ஞானியொருவர் அடைந்தாலும், புறச்சடங்கு அவரை விட்டு அகன்றுவிடாது என்று தெளிவாக்கும் இடம் பாராட்டுக்குரியது. மனத்துக்கும் ஆன்மாவுக்கும் நிம்மதியும், பேரின்பமும் அளிக்கின்ற மெய்ஞ்ஞானம் பற்றி எளிமையும், தெளிவுமாக சுமார் 8-க்கும் மேற்பட்ட நூல்களைப் படித்து முடித்த, பெயர்களைத் தெரிந்து கொண்ட ஓர் அடிப்படைப் புரிந்துணர்வோடு எழுதப்பட்டதே இத்தொகுப்பு நூல். இப்படி மறைவுக்குட்பட்ட பெரும் கருவூலத்தை ஞானியரைக்கொண்டு வேட்டையாடி நமக்கு ஞான விருந்தைப் படைக்கின்றார் மணவையார்.

8. காசிம் புலவரின் திருப்புகழ் (1983)

பணிந்தாருடைய பாவங்களைப் மாற்றவல்ல இறைவனை, நலந்தீங்கிலும் மறவாது நினைதல் வேண்டும் என்று அவன் புகழ்பாடி அமையும் நூலே திருப்புகழ். இந்த மூலநூலுடன், மணிக்கவி எம்.சையது மூஸா ஆலிம் புலவரின் தமிழ்ப்புலமையும், இஸ்லாமிய ஞானமும் செறிந்த