பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் வா சா பானு நூா்மைதீன்

75


உரையையும் இணைத்து, இதனை ஆராய்ச்சி செய்து அரிய தொகுப்புக் கட்டுரைகளையும் சேர்த்து ஆசிரியர் 'தொகுத்துத் தந்த மற்றோர் இனிய நூல் காசிம்புலவர் "திருப்புகழ்" - ஆய்வு நூல்.

இறைவனை - அவனருள் பெற்றுச் சிறந்தாரைப் புகழ்ந்து பாடுவதே 'புகழ்' எனும் நூற்செய்தி. இறைத்தொடர்புடைமையால் 'திருப்புகழ்' எனப்பட்டது. இந்நூல், பெருமானார்(சல்) அவர்களின் புகழ்பாடும் நூலாகவும் உள்ளது. புகழ்நூல் என்பதால், பெருமானார்(சல்) அவர்களின் புகழ் மொழிகள் அடங்கிய நூல் எனவும் கூறலாம்.

காசிம் புலவரின் குரு திருவடிக் கவிராயர், "இறைவனருள் புகலும் இவ்விதச் சந்தத் திருப்புகழ்-அருணகிரி திருப்புகழ் போல் வேறு எவராலும் பாட முடியாது” எனக் கூற காசிம் புலவர் தாம் அவ்விதம் பாடுவதாகக் கூறி இந்நூலை யாத்தனர்.

ஆசிரியர் வழியாக, இந்த இஸ்லாமிய இலக்கியப் பணி மூலமாக, இஸ்லாமுக்கும் இறைக்கும் இருந்த அரிய தொடர்பினை வெளிக்காட்டும் நன்முயற்சி இதில் கனிந்துள்ளது. தொடக்கக்கால இஸ்லாம் தூய இசை செறிந்த காலம். அந்த மரபின்படிதான் இன்று இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் காணும் நூற்றுக்கணக்கான பாடல்கள் இசை அடிப்படையில் எழுதப்பட்டன. இசைக்கெனவே எழுதப்பட்ட இலக்கியங்களும் நிரம்ப உண்டு. தொகுப்பாசிரியர் மணவையார் "இஸ்லாமியத் தமிழிசை" என்பது பற்றிக் கருத்தரங்கு நிகழ்த்தவிருக்கும் அளவுக்கு இசையார்வமும், இஸ்லாத்தில் அதற்கிருந்த தகுதியான இடமும் பற்றிக் குறிப்பிடும் வண்ணம் காட்டுகின்றார்.

மணிக்கவி அவர்களின் அரிய உரை விளக்கத்துடன், மிகச்சிறந்த 5 ஆய்வுக்கட்டுரைகள் மிளிர்ந்த தொகுப்பாக