78
மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி
வரின் திருப்புகழ்ப் பாடல்களும் கற்கண்டு சொற்கொண்டு பாடிப் பரவிவரும் இசைவெள்ளம் காதில் பாய்ந்தால், இஸ்லாம் இசைக்கு எதிரியும் அல்ல; கவிஞர்களை, இசைவாணர்களைப் புறக்கணிக்கும் மார்க்கமும் அல்ல என உணரலாம்.
மேலும் இந்நூலில் அமைந்த மணிக்கவியாரின் உரை, எல்லோரும் உணர்ந்தறிய வேண்டிய பொன்னுரை. ஒரு நூலுக்கு இலக்கியத்துக்கு. உரை எழுதுவது என்பது எளிய காரியமன்று. உரை உருவாவதற்கு எத்தனை முயற்சிகள், தேடல்கள் தேவை என்பதை உணர முடிகின்றது. அரும்பாட்டுக்குப் பின் கிடைத்த பிரதிகள், அதில் விளைந்த அச்சுப்பிழை, பாற்சிதைவு, பாடல் பேதங்கள், சந்தக் குறிப்பின்மை எல்லாம் முட்டுக் கட்டைகளாகி வந்த சோதனையை விளக்குகின்றார் உரையாசிரியர்.
கே.பி. செய்குத்தம்பி அவர்களால் செப்பனிட்ட பிரதியை வைத்தும், ஹஸன் அவர்களால் சில திருத்தங்களை அரிதின் முயன்று தேடிக் கண்டுபிடித்துப் பெற்றதும் விளக்கியுரைத்தபான்மையைப் படிக்கும்போது, ஒரு மூல நூலும், நல்லுரையும் எப்படி அரிதின் அச்சுவாகனமேறி உதயம் செய்கின்றன என்பதனைத் தெளிவாக உணர்ந்து வியக்கின்றோம்.
திருப்புகழ் போன்ற இசை நூலுக்கு மிக அதிகமான கவனம் தேவைப்படும் தன்மையையும் உணர்த்துகின்றார். நூலாராய்ச்சிக்கும் இது ஓர் அரிய முன்னோடியாக உள்ளது. நூலில் பல அரிய செய்திகள் மேலும் பரந்துள்ளன. பெருமானார் (சல்) அவர்களின் பெருமைகள், புகழ், பண்பு நலன்கள், போர்த் திறன், செயற்கரிய செயல்கள், நபித்துவம் அருளப் பெற்றமை, நபிக்குரிய இலாஞ்சனை பதிக்கப் பெற்றமை, சொர்க்க உலா, விண்ணேற்றம் என வாழ்க்கை