பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் வா சா. பானு நூர்மைதீன்

79


வரலாறே திருப்புகழ் நெடுக நிறைந்துள்ளது. மார்க்கச் செய்திகளும், மஹ்மூது யானை, துல்துல் குதிரை, பூமியைத் தாங்கும் காளை, சிராத்துல் முஸ்தகீம் பாலம் வெளகுல் மகுபூல் பலகை, ஜிபுராயீலின் எழில், சுவனமாதரழகு, சொர்க்க - நரக வர்ணனை.

ஐவகைக் கடமைகள், திருக்குர்ஆன் எளிமை, நபிமார்களின் பட்டியல், யுகமுடிவு நாள், கலிமா விளக்கம், குறுஷு அமைப்பு போன்ற சீரிய செய்திகள் கவிநயத்துடன் மிளிர்கின்றன. நல்ல உவமை, உருவகம், சந்தம் எனச் சொந்தம் கொண்டாடியது காசிம் திருப்புகழ், சந்தவினிமையைத் திருக்குர் ஆனைப் பாராட்டுமுகமாக,

“பார்படர் ஞானக் கொழுந்தோ வல
தார முதாகப் பிறந்ததோ வடி
பாகுறு தேனிற் கனிந்ததோ நவரசமேயோர்
பாரச மூறிச் சமைந்ததோ நல
சீனியின் வாரிப் பிணைந்ததோ”

என்ற அடிகள் மூலமாகவும், ஆழ்ந்த உவமை நலம் காட்டு முகத்தான்,

இளமையும் உடைமையும் மஞ்சள் வெயில்
போல் நிலையில்லாதன;
தோற்றத்தின் பெருமை பிறைச் சந்திரனைப்
போன்று மாறிவருவது;
இயல்பாய குணங்கள் தீயில் விழுந்து சாகும்
விட்டிலைப் போன்றது;
அழகு வானவில்லைப் போலத் தோன்றித் துலங்கி
உயிரின் நிலைமையோ முட்டையிட்டபறவை
பறந்துசெல்வதைப் போன்றது;
இனிமையான மனம் வெண்மையான கண்ணாடி
போன்றது;