பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


தேசிய ஒருமைப்பாடு என்பதே சாத்தியம் என்று சத்தியக் கணையோடு நிரூபிக்கின்றார். இன்று உலகம் வளர்ச்சி நோக்கி விரைந்து கொண்டிருக்கும் அறிவும் ஆராய்ச்சியும் மிகுந்த காலக்கட்டத்தில் நம் அரிய படைப்புக்களை உலகப் பெருமொழிகளுக்கு அடையாளம், அறிமுகம் காட்ட வேண்டிய நிலையில் இருப்பதால் இதுபோன்ற தொகுப்புப் பணிகள் காலக்கட்டாயமாகக் கனிந்து நிற்க வேண்டுவனவாகத் தோன்றுகின்றன.

இந்நூலில் கவிஞர் மேத்தா, சிலம்பொலி செல்லப்பனார் போன்றோர் குறிப்பிடும்போது, இலக்கிய நோக்கின் படி தமிழ் இலக்கியம் என்ற ஒரே வகைதான் இருக்க முடியும் - எச்சமயத்தாரால் படைக்கப்பெற்றாலும் தமிழில் உருவாகும் இலக்கியம் தமிழ் இலக்கியமே என்று வானளவு விரிந்த பொதுமை நோக்கோடு குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், கேட்பதற்கு இனிதாக இருக்கும் இக்கொள்கை, நடைமுறையில் பொறுமையாகப் பிறரால் கடைப்பிடிக்க இயலவில்லையே என்ற வேதனை உருவாதலே நிச்சய உண்மை. ஏனெனில் அனைத்தும் தமிழிலக்கியம் என்றால், பள்ளி, கல்லுாரி, பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில் கிறிஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள், நூல்கள் என வெளியிடும்போது, இரட்சணிய யாத்திரிகம், தேம்பாவணி, தற்போது சில நூல்களில் இயேசு காவியம். சீறாப்புராணம், குணங்குடி மஸ்தான் பாடல்கள் மட்டுமே இடம் பெறுகின்றன. பிற எண்ணற்ற அந்தாதிகள், பிள்ளைத் தமிழ், கலம்பகங்கள், மாது குறம், இராஜ நாயகம் போன்ற 11 காப்பியங்கள், கீர்த்தனைகள், திருப் புகழ்கள், கிஸ்ஸா, மாலை, மசலா, முனாஜாத்து, படைப்போர் போன்ற புதுப்படைப்புகள், புதுக்கவிதைகள் மலர்ந்த தொகுதிகள், நாவல்கள், சிறுகதைகள், திறனாய்வுப் படைப்