பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் வ.சா பானு நூா்மைதின்

83


புகள், ஈழ, மலேசிய, பிறநாட்டு வெளியீடுகள் ஏன் புகுத்தப் பெறவில்லை? பெயரளவில் கூட அறியப்படாத அளவில் இஸ்லாமிய இலக்கியப் பகுதி செய்த பாவம்தான் என்ன? மணம் பெறுவதற்குரிய மங்கையர் மாண்புகள் ததும்பப் பெற்றிருந்தும் ஓர் எழில் மிகுந்த நங்கைக்கு மணம் நேர்ந்திடாக் கொடுமைபோல், இஸ்லாமிய இலக்கியம் தமிழ் கூறு நல்லுலகத்தின் இரசனைக்கு ஆளாகாத சோகம் தான் என்ன?

அவ்விலக்கியங்களை எல்லாம், இன்னும் நாம் அரிதின் முயன்று தேடிப் பார்த்தும், திருத்தியும், வெளியிட்டும், அறிமுகப்படுத்தியும், நிற்கு வேண்டிய கட்டத்தில் தான் இருக்கின்றோம். மணவையார் போன்ற அரிய பிறவிகள், தமிழ்த் தாத்தாவைப் போல் “இலக்கிய தாதாக்கள்” கிடைக்கவில்லையென்றால் இன்னுமல்லவா கொடுமை நேர்ந்திருக்கும்? எல்லோர்க்கும் உணர்த்தி. எல்லோரும் அறிந்த பின்னர், எல்லோரும் ஓர் நிறை எய்திய பின்னர் வேண்டுமானால், எல்லா இலக்கியங்களுடன் சேர்த்துத் 'தமிழ் இலக்கியம்' என்று ஓர் விலையிட்டுக் கொள்ளும் நிலை அமைத்துக் கொள்ளலாம். இன்னும் இஸ்லாமிய இலக்கியங்கள் அறிமுக நிலையில் மட்டுமே இருப்பதான், பல்கலைக்கழகங்களை ஆளும் நிலைக்கு வரட்டும், அப்போது மேத்தா, சிலம்பொலியார் கனவுகளுக்கு நாமும் கட்டியம் கூறுவோம்.

அதற்கான கன்னி முயற்சியைத்தான் மணவையார் போன்ற சான்றோர் தொடங்கி அரிய இஸ்லாமிய இலக்கியப் பணியாற்றி வருகின்றனர். அந்தச் சேவையைப் பாராட்டுவோம். 'தமிழ் இலக்கியம் மலர்தல் வேண்டும்' என்ற இக்கருத்தும், இவர் மூண்டெழுந்து திரட்டிய நூற்பணியால் அல்லவோ இக்கட்டத்தில் கனிவுடன் பரிந்துரைக்-