உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். வா.சா பானு நூா்மைதீன்

85


விழைந்தார் மணவையார். மனிதமனம் காலம், தேசம், சமயம், கடந்து மனித உணர்வோடு சங்கமமாகிச் சிறக்கட்டும். சிறுத்துவிடக்கூடாது என்ற பேருணர்வை விதைக்கவும், புதைக்கவும் புறப்பட்டாரோ மணவையார் என்றே எண்ணத் தோன்றுகின்றது. இவ்வழி இவருக்கு வெற்றியையும் ஈட்டித்தந்தது என்றே நிச்சயமாகக் கூறலாம்.

தமிழாலயத்திற்கு முன்பு, தமிழ்த் தாய்க்கு முன்பு, தமிழ்க் குலத்திற்கு முன்பு எந்த வேற்றுமையும் இல்லை; ஒன்றுபட்டதே தமிழர் வாழ்வு; இறைவன் குலம் பார்ப்பதில்லை; தமிழோ மதம் பார்ப்பதில்லை என்ற சத்தியத்தை நிரூபிக்கும் இது போன்ற நூல்கள் பள்ளி கல்லூரி பாடத்திட்டத்தில் வைக்கப் பெற்றால் மாணவர்க்கு ஒட்டு மொத்தமான பொது இலக்கிய அறிமுகம் நிகழ்த்துவதற்கு வழிகோலும். பொதுவான மாணவர்க்கு இதுபோன்ற நூல்களை அறியவைக்கும்போது, மாற்றுச் சமயத்தாரைச் சம நோக்கில் காணவைக்கும் இம்முயற்சிகளை இலக்கிய வளர்ச்சி, இனவொருமை, வேற்றுமையில் ஒற்றுமை போனறன இயல்பாய் மலரும். இதுவே இன்றைய சமுதாயத்தின் தேவையும் ஆகின்றது.

ஏதோவொரு முத்திரை குத்தப்பட்டு இனந்தெரியாக் கோலத்தில் தத்தளிக்கும் இஸ்லாமியர்க்கு ஒரு விடுதலைப் பெருமூச்சைத்தான் விடுதற்கு ஆசிரியர் இப்பணி ஆற்றியுள்ளாரோ எனப் பாராட்டிக் கண்மணி சிந்தத் தோன்றுகின்றது. என் ஆசிரியர் ந.சஞ்சீவி அவர்கள் கூறுவது, 'இஸ்லாத்தின் அருவ வழிபாடு, கிறிஸ்துவத்தின் கடையனையும் கடைத்தேற்றம் செய்யும் தொண்டு, இந்து சமயத்தின் சகிப்புத் தன்மை போற்றத்தக்கது ஆகும்' என்ற வாக்கு இங்கு எண்ணத்தக்கது. ஒருமை உணர்ச்சியைக் கருத்தரங்கு, தொகுப்புநூல் என்பனவற்றின் வழி ஏற்பாடு செய்து வரும்