உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


மணவையாரின் தொண்டு காலத்தால் நினைவு கூறும் நல் முயற்சி என்று அன்னார் கூறியது பொன்னுரை. சிலம் பொலியாரும் உமறுப்புலவரின் ஒரே பாடல் இஸ்லாமிய நெறியைக் கண்ணெனக் காட்டும் என்பதற்கு,

"ஒருத்தன் நாயகன் அவற்குரிய தூதெனும்
அருத்தமே உரைகலிமா அந்நிண்ணயப்
பொருத்தம் ஈமான் நடைபுனைதலாம்
அமல் திருத்தமே இவை - இஸ்லாமிற் சேர்தலே"

என்ற பாடலைக் காட்டி நிற்கின்றார். மேலும் சேகனா, ஆலிப்புலவர், வண்ணக் களஞ்சியம், குலாம் காதிறு, கனகக் கவிராயர், ஐதுறூசு, வண்ணப் பரிமளம், காசீம், குணங்குடியார், ரசூல் பீவி, கச்சிப்பிள்ளை அம்மாள், ஆசியா உம்மா போன்றோரையும் காட்டி, காயல் நூஹ் லெப்பை ஆலிமின்,

நல்லஷரீஅத்து வித்தாச்சு தவமாம்
தரீக்கத்து மரமாச்சு
எல்லை ஹகீகத்து பூவாச்சுது
இலங்கும் கனியாச்சு மஃரிபத்து

பாடலையும் எடுத்துக்காட்டி அறிமுகம் செய்கின்றார். மேலும் புதுக்கவிதை வரிசையில் அப்துல் ரகுமான், மேத்தா, இன்குலாப், நாஞ்சில் ஆரிது போன்றோரையும் அறிமுகப்படுத்துகின்றார். எப்படியும் மணவையாரின் நோக்கும் போக்கும் வெளிப்படும் விந்தையை இத்தொகுப்பிலும் காண்கின்றோம்.

v. மொழி பெயர்ப்பு

10. நூறு பேர்

மொழிபெயர்ப்பு நூலான ‘நூறுபேர்’ இணையற்றப் படைப்பு; இஸ்லாமியரை நிமிர வைக்கும், சமுதாய வீதி