பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ் இலக்கியத்தில் தொலைக் காட்சி 105

"நாடிய சொல் சுருதிநிகழ் நாவினான் சஞ்சயனும் நள்ளென் கங்குல் ஒடியொளித் திடுகதிரோன் உதிப்பதன்முன்

விலோசனம்நீர் உகுப்ப எய்தி ஆடிமுகத் தரசினுக்கும் ஐயிருப

தரசரையும் அளித்து வாழ்ந்து வாடியமெய்ச் சவுபலைக்கும் உற்றதெல்லாம் வாய்மலர்ந்தான் வாய்மை வல்லான்.'"

(சுருதி-வேதம்; தள்ளென்கங்குல்-நடுஇரவு; விலோசனம் நீர்-கண்ணிர்; ஆடி முகத்து அரசு-திருதராட்டிரன்; சவுபலை-சுபலராசன் மகள் காந்தாரி.) என்ற பாடலால் அறிகின்றோம். இங்ங்ணம் இருந்த இடத் திலிருந்து கொண்டே தொலைவில் நடைபெறும் நிகழ்ச்சி களை நேரில் கண்டு ஒருவர் அறிவிக்க வேண்டுமாயின் தொலைக்காட்சி (Television) போன்ற ஒரு கருவியமைப்பு இருந்திருக்க வேண்டும்; இருக்க வேண்டும் என்பதாகவாவது கவிஞன் கனவுகண்டிருக்க வேண்டும்.

இக்காலக் கவிதையில் : புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ காவியப் போக்கில் எழுதப் பெற்ற ஒரு கற்பனைச் சொல்லோவியம். அம்மலை யில் குப்பனும் வள்ளியும் சந்திக்கின்றனர். அங்கு இரண்டு மூலிகைகள் இருப்பதாகக் கவிஞர் கற்பனை செய்கின்றார். இவற்றின் மகிமையைக் குப்பன்,

'ஒன்றைத்தின் றால் இவ் வுலகமக்கள் பேசுவது.

நன்றாகக் கேட்கும்மற் றொன்றைவா யில்

போட்டால்

4. வில்லி. பார. பதினெட்டாம் போர். பாடல்146:239 (ராஜம் பதிப்பு) -

அ.த-?