பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1. அரங்கநகர் அப்பன்

தமிழ் நாட்டில் பக்தி இலக்கியம் தோன்றிய காலத் திலும் அதற்குச் சற்றுப் பின்னரும் வைணவத்தின் வளர்ப்புப் பண்ணைகளாகத் திகழ்ந்த பெருந் தலங்கள் திருவேங்கடம், திருமாவிருஞ்சோலை, திருவரங்கம் , காஞ்சிபுரம் என்பவையாகும். இவற்றுள் பெரிய கோயில்" என வழங்கப்பெறும் திருவரங்கம் தனிப் பெரும் புகழுக்கு உரிய இடமாகும். ஆற்றிடைக் குறையாகிய இந்த அரங்கம் நீர் வளமும் நில வளமும் ஒருங்கே பொருந்திச் சோலைகள் சூழ்ந்து விளங்குகின்றது. இதன் வளத்தை,

“முருகனுறை குறிஞ்சித்தேன் முல்லை பாய

முல்லைநிலத் தயிர்பால்நெய் மருதத் தோட மருதநிலக் கொழும்பாகு நெய்தற் றேங்க வருபுனல்கா விரிசூழ்ந்த வளம்" என்று வருணித்திடுவர் பிள்ளைப்பெருமாள் அய்யங்கார். இந்த அரங்கத்தில் கோயில் கொண்டுள்ள அரங்க நகர் அப்பனைக் காவிரியும் அதன் கிளையாறாகிய கொள்ளிட மும் மாலையிடுவது போலச் செல்லுகின்றன. இந்த ஞானப் பேரூரில் கிடந்த திருக்கோலத்துடன் திகழும் எம்பெருமானைப் பத்து ஆழ்வார்கள் 'பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப்” பாடியுள்ளனர். இவர்களுள் திருப்பாணாழ்வாரின் பெருமையைக் குறித்து,

“காண்பனவும் உரைப்பனவும்

மற்றொன்(று) இன்றிக் *முருக. தனுஷ்கோடி மணி விழா மலரில் (1967) லெகசி வந்தது. -

1. சிரங்கநாயகரூசல்-29 卤·岛一球

متمم مم--متم