பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


i{8 அறிவியல் தமிழ்

நாட்டம் உள்ளவர்களைக் கைவல்யார்த்திகள்’ என்றும், ஈசுவராதுபவத்தில் இச்சையுள்ளவர்களைப் பகவத்பிராப்தி காமர்கள்’ என்றும் மெய்யறிவு நூல்கன் குறிப்பிடும். இவ்விரு திறத்தினரும் முமுட்சுகள்" என்றே வழங்கப் பெறுவர். ஈண்டு நாம் கூறப்போவது ஈசுவராதுபவத்தில் இ ச் ைச யு ள் ள மூமுட்சுகளைப் பற்றியேயாகும். இறைவனைக் கிட்டப்பெற்று அவனுக்குப் பல்வேறு அநுபவ சைங்கரியங்களைச் செய்து அவனுடைய முகமலர்ச்சியைக் கண்டு மகிழவேண்டும் என்னும் இச்சையால் சமுசாரத்தில் (இவ்வுலக வாழ்வில்) வெறுப்புக் கொண்டவர்களே இவர்கள். இவர்கட்கு ஆன்ம சொரூபம்’ இன்னது என்றும், அந்த வழியைப் பற்றுவதனால் உண்டாகும் பயன் இன்னது என்றும் தெரிந்திருத்தல் வேண்டும். இந்த முமுட்சுகள் முத்தி நிலையை எய்துவதற்குரிய நெறிகளை ஈண்டு விளக்குவோம், -

வைணவ சமயத்தில் சித்தோபாயம், சாத்தியோ பாயம் என்ற இரு தெறிகள் பேசப்பெறுகின்றன. சித்தோ பாயம் என்பது, நம்மால் செய்யப்பெற வேண்டியதாயன்றி முன்பேயுள்ள நெறி; சர்வேசுவரன். இதனை வேதாந்த தேசிகர், - -- "மன்னும் அனைத்துற வாய்மருள் மாற்றருள் ஆழியுமாய்த் தன்னினை வால் அனைத் துந்தரித்(து)

ஓங்கும் தனிஇறையாய் இன்னமு சுத்தமுதால் இரங் குந்திரு நாரணனே மன்னிய வன்சரண் மற்றோர்பற்

றின்றி வரிப்பவர்க்கே’’

2. ஆன்ம சொரூபம்-உடலைவிட்டு வேறுபட்ட ஆன்மா தனக்கும் பிறருக்கும் உரிமையுடைதாயின்றி, ஈசுவரனுக்கே அடிமைப்பட்டதாக இருத்தல் .

3. தேசிக பிரபந்தம்-69