பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


110 அறிவியல் தமிழ்

பித்தனே' "பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே" "பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே?' என்ற அவர்தம் வாக்கால் தன்னைப் பித்தன்' என்றும், பேயன்' என்றும் கூறிக்கொள்வதனால் இதனை மேலும் தெளிவு பெறலாம். இந்தப் பத்தி நிலையை மெய்ப்பொருளியலார் பத்தி யோகம் என்று பயன்படுத்தி அதனை எட்டு அங்கங்களாக முறைப்படுத்தி வகுத்துக் காட்டுவர். இதனை,

"எமநியம ஆசனங்கள்

இயல் ஆவி புலனடக்கம் தமதறியத் தாரணைகள்

தாரையறா நினைவொழுக்கம் சமமுடைய சமாதிநலம்

சாதிப்பார்க்(கு) இலக்கு ஆகும் அமரர்தொழும் அத்திகிரி

அம்புயத்தாள் ஆரமுதே.’’’ (தாரை அறா-இடைவிடாத சாதித்தல்-அதுட்டித்தல் அம்புயத்தாள்-பெரிய பிராட்டியார்; ஆர் அமுது. அருளாளன்.)

என்று விளக்குவர் வேதாந்த தேசிகர். இத்த எட்டு அங்கங்களையுடைய' பக்திநெறி வழி

யொழுகுவார்க்குப் பிராட்டிக்கு ஆராஅமுதமாக இருக்கும் எம்பெருமான் குறிப்பொருளாகி வீடுபேற்றை அளிப்பான்.

8. மேற்படி 3:6

9. மேற்படி 3:7 10. மேற்படி 3:8

11. தேசிகப் பிரபந்தம்-254,

12. எட்டு அங்கங்களாவன: (i) யமம்.அகிம்சை, சத்தியம், திருடாமை, காமத்தை அடக்குதல், பொருளைச் சேர்க்க முற்படாமை ஆகிய நிலை; (ii) நியமம்-துர்ய்மை, உள்ளதைக்கொண்டு மன நிறைவு பெறுதல்; விரதம தவம் முதலி:ன செய்தல்,எல்லாச் செயல்களையும் இறைவனிட