பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


} {} அறிவியல் தமிழ்

(மார்வம்.இதயம்; ஆர்வம்.பக்தி; அரவதண்டம்-யம தூதர்களால் வரும் துன்பம்,}

'பூசும் சாந்து என்நெஞ்சமே,

புனையும் கண்ணி எனதுடைய

வாச கம்செய் மாலையே;

வான்பட் டாடையும் அஃதே;

தேசம் ஆன அணிகலனும்

என்கை கூப்புச் செய்கையே’** (சாந்து-சந்தனம்; கண்ணி-மாலை)

என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் அவருடைய பத்தி நிலையைக் கண்டு அநுபவிக்கலாம்.

மெய்யறிவினர் இப்பத்தி நெறி கர்மயோகம், ஞான யோகம், பக்தியோகம் என்ற மூன்று நிலைகளில் பயிற்சி யடைய வேண்டிய நெறி என்றும் கூறுவர். சாத்திரம் களைப் பயின்ற அறிவினால் சில சடங்குகளையும் கடமை களையும் தவறாது செய்தல் வேண்டும். இறைவனை ஏத்தல், திருத்தலப் பயணத்தை மேற்கொள்ளல், அறம் புரிதல் போன்றவை யாவும் கர்மயோகத்தில் அடங்கும். இக்கர்மயோகத்தினால் தன்னை மறத்தல், மனத்தைக் கட்டுப்படுத்தல், ஆன்மாதுபவம் பெறல் போன்ற நிலைகள் ஏற்பட்டு சமுசாரத்தில் ஆழ்த்திருக் கும் ஆன்மா தூய்மையுறுகின்றது. அடுத்த நிலை, ஞான யோகம் என்பது. கர்மயோகத்தில் தூய்மையடைந்தி ஆன்மா இந்நிலையில் தியானத்தில் ஆழங்கால் படுகின்றது. இயமம், நியமம் போன்ற செயல்களால் ஆன்மா அமைதி நிலையை நாடுகின்றது. அலைந்து திரியும் மனத்தை அங்ங்ணம் அலையவிடாடில் நிலை நிறுத்தும் நிலை ஏற்படு கின்றது. அஃதாவது, மெய்யறிவினர் குறிப்பிடும் கைவல்ய

15. திருவாய். 4.3:2