பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

அறிவியல் தமிழ்

என்று அருளிச் செய்துள்ளதையும் உணரலாம். திருமங்கை யாழ்வாரும்,

“கூறா ஐவர் வருந்துகுமைக்கக்
   குடிவிட் டவரைத்
தேறா துன் அடைந் தேன் திரு

விண்ணகர் மேயவனே!”[1]

[கூறு ஆ-பாகமாக: ஐவர்-ஐம்புலன்கள்; குகைக்க-இம்சிக்க குடிவிட்டவர்.இந்திரியங்கள்; தேறாது-நம்பாமல்]

என்று திரு விண்ணகரில் சேவை சாதிக்கும் ஒப்பிலியப்பனைச் சரண் அடைந்து முறையிடுகின்றார். “படைப்புக் காலத்தில் என் நன்மைக்காக என்னிடத்தில் குடியேறியுள்ள ஐம்புலன்களும் என்னை மிகவும் துன்புறுத்துகின்றன; அவற்றை நம்பாமல் உன்னிடம் சரண்புகுகின்றேன்; காத்தருள்க” என்று வேண்டுவதைப் பாசுரத்தில் காண்க. இதே ஆழ்வார்,

“கல்தேன் பாய்ந்தொழுகும்
   கமலச்சுனை வேங்கடவா!
அற்றேன் வந்தடைந்தேன்

  அடியேனை யாட்கொண்டருளே.”[2]

[கல் தேன்-மலை முழைஞ்சுகளினின்றும் பெருகும் தேன்; கமலச் சுனை-தாமரைச் சுனை; அற்றேன்-உனக்கே அற்றுத் தீர்ந்தவன்]

என்று திருவேங்கட முடையானையும் சரணம் அடைதலைக் காணலாம். இவர் திருக்கண்ணபுரத்து எம்பெரு மானிடமும் சரணம் அடைந்தமையை “அம்மானை.... அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே”[3] என்ற பாசுர அடியால் அறியலாகும்.


  1. 26. பெரி. திரு. 6.2:7
  2. 26. பெரிய. திரு. 1:9:9
  3. 27. பெரிய திரு. 8.9:2