பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முத்தி நெறி #19

சரணாகதி தத்துவத்தின் தந்தை போன்றவர் பிரபந்தர்களின் தலைவராக விளங்கும் நம்மாழ்வாதி. அவர் தம்முடைய திருவாய் மொழியில் "நம் பெருமான் அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்' என்றும், கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்' என்றும் தம்மை அறிமுகப் படுத்திக் கொள்ளுகின்றார். எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழுந்தாய்" என்று எம்பெருமான் தனக்குச் சரணாக அமைந்தமையையும் 'உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே' என்று தான் எம்பெருமான் கழலிணைகளில் சரணாகப் புகுந்தமையையும் புலப் படுத்துகின்றார். இவ்விடத்தில்,

“சேவிபக்கல் சேஷபூதன் இழியுந்துறை, ப்ரஜை

முலையிலே வாய் வைக்குமாப்போலே’

|சேஷி-இறைவன்; சேஷபூதன்.சேதநன்; ப்ரஜை. குழவிi என்ற முமுட்கப்படி வாக்கியம் சிந்திக்கத் தக்கது.

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்னும் இறைவனுடைய ஐந்து நிலைகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று கண்டவர்கள். இந்த ஐந்து நிலைகளிலும் காக்கும் இயல்பினதும், அடையத் தக்கதும், எல்லாத் திருக்குணங்களும் நிறைந்துள்ளதுமான இடம் அர்ச்சாவதாரமே என்று தெளிந்தவர்கள். இவர்கள் ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா

28. திருவாய். 5.9:11 29. திருவாய். 5.8:11 30. திருவாய். .7:10 31. திருவாய். 6.10:10 32. முமுட்கப்படி-147