பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அரங்கநகர் அப்பன் l l யில் வெளியிட்டருளுகின்றார். யாழையே தெய்வமாகப் போற்றி வந்த பாணர் குலத்தில் தோன்றிய பாணர் விளக்கு இசையாகவும் இசைப்பயனாகவும் இருக்கும் அந்த இறைவனை அரங்கநகர் அப்பனாகக் கண்டு கொள் கின்றார்.

முதலில் பெரிய பெருமாளின் திருவடிகளின் அழகு

இவரது கண்களைக் கவர்கின்றது.

  • கமல பாதகலந்து

என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே!’**

என்று கமலபாதம் தம்மை ஆட்கொண்டதை வெளியிடு கின்றார். இங்கு இறைவனை ஆழ்வார் அமலன், விமலன், நிமலன், நின்மலன் என்ற சொற்களால் குறிப்பிடுகின்றார். மிகவும் தாழ்ந்தவரான தாம் சந்நிதிக்குள்ளே புகுவதனால் பெருமாளுக்குப் பெருத்த குற்றம் உண்டாகும் என்று அஞ்சியிருந்தவர் அந்த ஐயம் தோற்ற அமலன்’ என்கின் றார். தம்முடைய சிறுமையை நோக்காமல் தம்மைப் பாகவதர்களுடன் ஆட்படுத்தி ஒரு சீரிய பொருளாக ஆக்கினதனால் எம்பெருமானது திருமேனியிற் பிறந்த ஒரு சிறந்த பேரொளியை அநுபவிப்பார் விமலன்’ என்கின் றார். அடியார்க்கு எளியனாகும் தன்மையை வெளியிட்டு நிற்பவனாதலால் நிமலன்’ என்றும், அடியார்களின் குற்றங்களைக் காண்கையில் குற்றமில்லாதவனாகையால் "தின்மலன்’ என்றும் குறிப்பிடுகின்றார். தன்னுடன் தொடர்பு கோண்டவர்கள் எக்குலத்தவராயினும், அவர் களை யெல்லாம் தூய்மை செய்து ஆயிரத்தெட்டு மாற்றுத் தங்கமாக்கிக் கொள்ள வல்ல திருவடிகளை அருளின் செவ்வியும் குளிர்ச்சியும் மலர்ச்சியும் கருதிக் கமலபாதம்' என்கின்றார். *கதிரவனைக் கண்டு

3. அமலனாதி-1