பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அறிவியல் தமிழ்

வழியனுப்ப வருவாள் போல் வெளியே வருகின்றாள் தலைமகள். ஆகத்துப் புதல்வனை ஒடுக்கியிருக்கின்றாள். "அறத்தாறு அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி, அன்னவாக என்னுநள் போல வருகின்றாள். பிரிவின் துன்பத்தை அடக்க முயல்கின்றாள். அடக்க முயன்றதன் வழியே பெருகிப்பெருகி வளரும் துன்பத்தை அவளால் பொறுக்க முடியவில்லை. அழுகையை அடக்க முயன்ற தலைவியின் நெஞ்சம் குமுறி நிற்கின்றது. ஆகத்திருந்த புதல் வனுடைய உச்சியை மோந்து நெட்டுயிர்ப்பு விடு கின்றாள். அப்புதல்வனின் முடியிலிருந்த செங்கழுநீர் மாலை, அவளுடைய அழற்கொழுந்து போன்ற மூச்சுக் காற்றுப் பட்டதால் வாடிக் கரிந்து போகின்றது. தலைவன் இதனைக் காண்கின்றான்; அழுகை நிறைந்த உள்ளம் புழுங்கி வருகின்ற அவளுடைய வருத்தத்தை உணர் கின்றான். உடனுறையும்போதே இவ்வாறு புழுங்கு கின்றவள் தான் பிரிந்தால் என்னாவாளோ எனக் கருதித் தன் செலவினைத் தவிர்க்கின்றான்.

'முன்னங் காட்டி முகத்தின் 4-55 trtu fr

ஒவச் செய்தியின் ஒன்று நினைந் தொற்றி பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு ஆகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல் மோயினள் உயிர்த்த காலை மாமலர் மணியுரு விழந்த அணியழி தோற்றம் கண்டே கடிந்தனம் செலவே.”* (முன்னம்-குறிப்பு: ஒவச்செய்தி-ஒவியம் உணர்த்துவது: ஒன்று நினைந்து-உடன்படாமையை நினைந்து; பாவை-கண் மணி, மாய்த்த-மறைத்த, ஆகம்-மார்பு பயந்த தந்த, 'பினையல்-மாலை; மோயினன்-மோந்து; மனியுரு-பவளம்

1. ஆகம்-5