பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அழுகையும் ஆன்மிக வாழ்வும் 14?

காலங்களில் ஆற்றின் வழியாகப் பாய்ந்து சென்று ஆழியில் கலந்த நீரை அளவிட்டுக் கூறமுடியாது. அங்ஙனமே, தன் வாழ்நாளின் பெரும் பகுதி வீணாகக் கழிந்துவிட்டதே என்று சோக உணர்ச்சியுடன் அழுகின்றார். தான் அன்று திருக்கோவலூரில் கண்ட எம்பெருமானின் திருவடிகளைத் தொழுதவாறு கடந்த காலத்தில் செய்ய முடியவில்லையே என்று பரிதபித்துப் பேசுகின்றார் பொய்கையாழ்வார்.

"பழுதே பலகாலும்

போயினவென்று அஞ்சி அழுதேன்.' என்பது அவரது திருமொழி.

ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் தனக்கு அறிவு மலராத காலத்தில் இராம பிரானைத் தோத்திரம் செய்யாது போனமைக்கு இரங்கி அழுகின்றார்.

"தெரிந்துணர் வொன்(று) இன்மையால்

தீவினையேன் வாளா இருந்தொழிந் தேன் கீழ்நாட்கள்

எல்லாம்.' என்பது அவரது திருவாக்கு. இந்தத் திருவாக்கினை, 'உணர்வு இன்மையால், உணர்வு ஒன்றின்மையால், தெரிந்து உணர்வு ஒன்றின்மையால்’ என்று பிரித்துப் பொருள் காணல் வேண்டும். "உடல் வேறு ஆன்மா வேறு" என்ற ஞான மில்லாமையைக் கருதி உணர்வு இன்மையால்" என்றார். ஆன்மா எம்பெருமானுக்கு அடிமைப்பட்ட "பொருள் என்கின்ற ஞானமில்லாமையை நினைந்து உணர்வு ஒன்று இன்மையால் என்றார். பகவானுக்கு அடிமை என்ற கொள்கைக்கு எல்லை நிலம் பாகவ

7. முதல் திரு. 16 8. பெரி. திருவர். 82