பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அழுகையும் ஆன்மிக வாழ்வும் 143

என்று பேசுகின்றார். இங்குத் தூறு என்பது மேலே குறிப்பிட்ட சம்சாரத்தையே குறிக்கின்றது.

இன்னொரு பாசுரத்தில் ஆழ்வார் தனக்குக் காட்சி தந்தருளுமாறு வேண்டுவது கல்நெஞ்சத்தையும் உருக்கும் தன் மையது.

"தாவி வையம் கொண்ட எந் தாய்! தாமோதரா என்று என்று கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி

சோர நின்றால் பாவிநீ என்று ஒன்று சொல்லாய்

பாவியேன் காண வந்தே.”* என்பது அப் பாசுரப் பகுதி. திருவடிகளால் மூன்று உலகங்களையும் அகப்படுத்திக் கொண்ட எந்தையே! தாம்பால் யாப்புண்ட தழும்பை வயிற்றிலுடையவனே! என்று பலகாலும் விடாயுடன் கூவிக்கூவி நெஞ்ச நீர்ப்பண்டமாக உருகிக் கண்ணி பெருக நின்றால், பாவி யான அடியேன் சேவிக்கும்படியாகக் கண்ணுக்கு இலக்காவி வந்து, ஆழ்வாரே! நீர் பாவி’ என்று சொன்னாலுக் போது: ; அதுவும் சொல்லுகின்றாய் இல்லை" என்பது இதன் கருத்து. மற்றுமோர் பாசுரத்தில்,

பாவியேன் தெஞ்சம்

புலம்பப் பலகாலும் கூவியும் காணப் - பெறேன் உன் கோலமே' என்கின்றார். பிறிதொரு பாகரத்தில்,

"பாய்ஒர் அடிவைத்து அதன் கீழ்ப்

பரவை நிலமெல்லாம்

11. திருவாய். 4.7:3 12. திருவாய். 3.8:1