பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரங்கநகர் அப்பன்

13

உந்தி மேலதன்றோ அடியேன்

      உள்ளத்து இன்னுயிரே![1]

என்பது ஆழ்வாரின் அநுபவம். முன்னைய பாட்டில் குறிப்பிட்ட “சிவந்த ஆடை” இப்பாட்டிலும் “அந்திபோல் நிறத்து ஆடை” என்று குறிப்பிடப்பெறுகின்றது. “பீதக ஆடையின்” அழகு படைப் பிற்கெல்லாம் காரணமாகிய உந்தியத் தாமரையின் அழகிலே உள்ளத்தைக் கொண்டு முட்டுகின்றது!

திருஉந்தியின் அழகை அநுபவித்துக் கொண்டிருக்கும் போதே எம்பெருமானின் உதரபந்தத்தின்மீது ஆழ்வாரின் கண்கள் தாவுகின்றன.

“மதுரமா வண்டு பாட
        மாமயில் ஆடரங்கத்(து)
        அம்மான் திருவயிற்(று)
உதரபந்த மென் உள்ளத்துள்நின்(று)

         உலாகின்றதே.”[2]

திருவரங்கச் சோலையில் வண்டுகள் இனிமையாக இசை பாட, அதற்கேற்பச் சிறந்த மயில்கள் களிப்புடன் கூத்தாடுகின்றன. இந்தப் பசுஞ்சோலையில் கடல் வண்ணனாகக் காட்சியளித்து அடியவர்களின் சிரமத்தைப் போக்கும் எம்பெருமானின் 'உதர பந்தம்' என்ற அரைக் கச்சு ஆழ்வாரின் நெஞ்சில் நின்று உலவத் தொடங்குகின்றது. இந்தத் திருமேனியழகில் இராமனாக அவதரித்து இராவண வதம் செய்தபோது ஏற்பட்ட வீரப்பொலிவும் கலந்து காணப்பெறுகின்றதைக் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். ஸ்ரீவைகுண்டநாதன் பெரிய பெருமான் ஆனவாறே, நித்திய சூரிகள்-வைகுந்தத்தில் இறைவனு

—————————

  1. அமலனாதி-3
  2. அமலனாதி-5