பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 அறிவியல் தமிழ்

அடிமை கொள்பவன் போலே இவருள் புகுந்து இவர் உடலையும் உயிரையும் ஒரு சேரப் புசித்துவிடுகின்றான்.

              திருவருள் செய்பவன்
                  போலஎன் உள்புகுந்து 
                உருவமும் ஆருயிரும்
                  உடனே உண்டான்
         (உருவம்-உடல்; உடனே-ஒருசேர)

துயர்அறு சுடர்அடி தொழுது எழுகைக்கு மயர்வுஅற மதி நலம் அருளுவாரைப் போலப் புகுந்தான் என்பது குறிப்பு. ஆயினும், ஆழ்வார் திறத்தில் "திரு அருளை" இறைவனே பெற்றவன் ஆயினன். இங்கே நம்பிள்ளை ஈடு வியக்கத் தக்கது: “அவன் அங்கீகாரத்துக்கு முன்பு சரீரத்தையே விரும்பிப் போந்தார். அவன் இவரை அங்கீகரித்த பின்பு இவர் தம் சரீரத்தை வெறுக்க இவர் சரீரத்தை அவன் விரும்பிப் புக்கான். இவருக்கு அவனுடைய சேர்க்கை சொரூபஞானத்துக்கு உடல் ஆயிற்று; அவனுக்கு இவருடைய சேர்க்கை உடலை உயிராக விரும்புவதற்கு உடல் ஆயிற்று.”'இறைவனுடைய இத்திட்டத்தை "அறிகிலேன்' ............சிறிய என் ஆருயிர் உண்ட திருஅருளே’’' என்கின்றார் ஆழ்வார். இந்தத் திருப்பாசுரத்தின் ஈட்டில், * பகைவரை அம்பாலே அழிக்கும்; அடியார்களைக் குணத்தாலே அழிக்கும்.......... அம்பு பட்ட புண் மருந்து இட்டு ஆற்றலாம்; குணத்தால் வந்த புண்ணுக்கு மாற்று இல்லை” என்ற பகுதி சிந்தித்து அநுபவிக்கத்தக்கது.

இவ்விடத்தில், "போகதசையில் ஈசுவரன் அழிக்கும் போது நோக்கவேணும் என்று அழியா தொழிகை'

לששט: סמסטאxaare

5. திருவாய் 9.6:5 3. கட்டின் சமிழாக்கம்-பகுதி 9 (திருவாய் 9.6:5) 7. திருவாய் 9.6:4

8. முமுட்கப்படி-சூத்திரம்-92