பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


150 அறிவியல் தமிழ்

திலவுமெய்ப் புளகம் போர்த்து

நிறம்புறத் தழுவிக் கொண்டான்' என்றவாறு குசேலரின் திருவடிகளில் வணங்குகின்றான். பின்பு அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவ ருடைய திருவடிகளைத் தன் மடிமீது வைத்து, "இத் திருவடிகன் நீண்ட தொலைவு நடந்து நொந்தனவே: என்று பகர்ந்து கொண்டே அவற்றை மெல்லெனப் பிடிக்கின்றான். குசேலர் கண்ணன் செய்யும் உபசாரங் களுக்குத் தன் பார தந்திரியத்திற்கேற்ப (தலைவனது வசத்திலிருப்பதற்கேற்ப) இசைந்திருக்கின்றார். இதனை,

" வழிநடந் திளைத்த வே இம்

மலரடி இரண்டும்?' என்று கழிமகிழ் சிறப்ப மெல்ல

வருடினான் கமலக் கண்ணன்; பழியில்பல் உபசா ரங்கள்

பண்ணவும் தெரியா னாகி ஒழிவுறு தவக்கு சேலன்

ஒன்றும்பே சாதி ருந்தான்' என்ற பாடலில் காணலாம். தம்மை அடிமை கொள்ப வனைப் போன்று தம்மிடம் கிட்டித் தாழ நின்றுத் தம் ஆன்மாவை முற்றும் கவர்ந்து கொண்ட ஆச்சரியமான சேஷ்டிதங்களை (செயல்களை) புடையவன் ஈசுவரன் என்பதை ஆழ்வாரும்,

"ஆட்கொள்வான் ஒத்துஎன் உயிர் உண்ட மாயன்'

9. குசேலோபாக்கியானம்-கு ேச ல ர் கர்ப்பறம் அடைந்தது செய்-104 கு தி tվա

10. குசேலோபாக்கியானம்-கு சேலர் தகர்ப்புறம் அடைந்தது-செய்.1.10

11. திருவாய் 9,6:7