பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 அகவை நிரம்பிய இந்நூலாசிரியர் பி.எஸ். சி., எல்.டி., வித்துவான், பி.ஏ.எம்.ஏ.பி.எச்.டி. பட்டங்கள் பெற்றவர்: ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள் வித் தலைமையாசிரியராகவும்,(1941-50) பத்தாண்டுகள் காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லுரித் தமிழ்ப் பேராசிரியராகவும், (1950-80) பதினேழு ஆண்டுகள் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும், { 1960-77 ) பணியாற்றி ஒய் பெற்றவர். ஓய்வு பெற்றபின் பதினைந்து மாதங்கள் (1978 பிப்ரவரி. 1978 ஜூன்) கலைக்களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவள். நலாயிரத் திவ்வியப் பிரப்பந்தத்தில் நம்மாழ்வாரின் தத்துவத்தை ஆராய்ந்து டாக்டர் (பி.எச்.டி) பட்டம் பெற்றவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வெளியிட்டவர்: தவிர ஆசிரியம் (5)இலக்கியம் (15), சமயம் (7), திறனாய்வு (4), அறிவியல் (18), ஆராய்ச்சி (4)-என்று 48 அரிய நூல்களின் ஆசிரியர் இனிமை, எளிமை, தெளிவு ஆனது இவர்தம் நூல்களின் தனிச் சிறப்பியல்புகளாகும்.