பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரங்கநகர் அப்பன்.

15

வென்று கொடுந்தவம் புரிந்தேனோ? என்று எண்ணிப் பார்ப்பவர் நான் அறிய ஒன்றும் இல்லையே! என்று குறிப்பிடுகின்றார். மூன்றாம் அடியிலுள்ள ‘செய்தனன்’ என்பதைத் தன்மை வினைமுற்றாகக் கொள்ளாமல் படர்க்கை வினைமுற்றாகக் கொண்டு ‘இப்படி என் நெஞ்சினுள் புகுவதற்கு எம்பெருமான் இரு காவிரியின் நடுவில் நின்றுகொண்டு என்ன கடுந்தவம் செய்தனனோ?’ என்பதாக உரைத்தருளின வேதாந்த தேசிகரின் வியாக்கி யானமும் அநுபவித்து மகிழத்தக்கது. ஓர் அடியானைப் பெறுவதற்கு எம்பெருமான் படுகின்ற பாட்டை யார் அறிவார்?

பிறகு, அப்பனின் திருக்கழுத்தின் அழகு ஆழ்வாரின் அகக்கண்ணுக்கு இலக்காகின்றது.


அண்ட ரண்டபகி ரண்டத்(து) ஒரு
       மாநிலம் எழுமால்வரை, முற்றும்
உண்ட கண்டம்கண்டீர்!

       அடியேனை உயக்கொண்டகே!"[1]

[அண்டர் - தேவர்கள்; அண்டம் - உலகங்கள்; பகிரண்டம்-அண்டங்கட்கு அப்பாலுள்ள உலகங்கள்; கண்டம்-திருக்கழுத்து.

திருமார்பின் அழகு அண்டங்களையெல்லாம் அமுது செய்தருளின் திருக்கழுத்தின் அழகிலே கொண்டு முட்ட, அந்த அழகு தம்மை ஈடுபடுத்தியதாகப் பேசுகின்றார் ஆழ்வார் இந்தப் பாசுரத்தில்.

அடுத்து, அனைவருக்கும் பட்சபாதம் இன்றி அபயம் அளிக்கும் ‘நீதி வானவனின்’ பவள வாயின் அழகு ஆழ்வாரை வசீகரிக்கின்றது.

—————————

  1. அமலனாதி-6