பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரங்கநகர் அப்பன்

17

என்ற அற்புதமான செந்தமிழாக வடிவங் கொண்டுள்ளது இந்தப் பாசுரப் பகுதி. ஓதி ஓதி, உணர்ந்து உணர்ந்து, இன்புற்று அநுபவித்தால் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படித் தேனாக இனிக்கும். அந்தக் கண்களின் அழகு என்னைப் பைத்தியமாக்கி விட்டதே! என்பதில் கடல் போலப் பெருகி வரும் இவரது பக்திக் காதலை நாமும் உணர்ந்து அநுபவிக்க முடிகின்றது. இல்லையா?

"ஏழையர் ஆவிஉண் ணும்மிணைக்
       கூற்றங்கொ லோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான்திருக்
       கண்கள்கொ லோஅறியேன்
சூழவும் தாமரை நாண்மலர்
       போல்வந்து தோன்றும்கண்டீர்
தோழியர் காள்! அன்னை யீர்!என்செய்

       கேன்துய ராட்டியேனே"[1]

என்று எம்பெருமான் திருக்கண்களில் ஈடுபட்டு நம்மாழ்வார் நாயகி நிலையிலிருந்துகொண்டு பட்டபாட்டை இவரும் படுகின்றார் போலும்.

அப்பால் எல்லா உறுப்புகளின் சேர்த்தி அழகினை ஒருங்கே அநுபவிக்கின்றார் ஆழ்வார்.

”ஆலமா மரத்தின்
இலைமேல் ஒருபாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான்
அரங்கத்(து) அரவின் அணையான்
கோல மாமணி ஆரமும்
முத்துத் தாமமும்
முடிவு இல்ல(து)ஓர் எழில்

—————

  1. திருவாய். 7.7:1