பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 அறிவியல் தமிழ்

நீல மேனி ஐயோ!

நிறைகொண்ட(து)என் நெஞ்சினையே!’’’

(பாலகன்-குழந்தை ஞாலம்-உலகம், கோலம்.அழகிய, ஆரம்-மாலை; தாமம்:மாலை; எழில்-அழகு; என்பது ஆழ்வாரின் அதுபவம். இந்தப் to no do ரத்தில், எ ல் ல ள அழகுகளையும் .ே ச ர் த் து க் கொண்டு, திருமேனி என்ற நீலச்சோதி ஆழ்வாரைப் படுத்திய பாடு வெளிப்படுகின்றது. நீலமேனியின் மாசற்ற அழகு, கடலாக வெள்ளமிட்டுவர, அதனை நெஞ்சால் அது:விக்கப் பாரிக்கின்றார்; அந்த அழகினை முடி வில்லதோர் எழில்’ என்று பாடிப் பரவசமாகின்றார். ஆனால், அழகு வெள்ளத்தில் சுருட்டிய பேரலை ஒன்று இவர் நெஞ்சை இழுத்துக் கொள்ள, ஐயோ, என் நெஞ்சையும் இழுத்துக்கொண்டதே!’ என்று ஏங்கு

கின்றார். "ஐயோ-பச்சைச் சட்டையுடுத்தித் தனக் குள்ளதை யடையக் காட்டி எனக்குள்ளதை அடையக் கொண்டானே!' என்பர் பெரியவச்சான் பிள்ளை. நான்

எல்லாவற்றையும் நின்று நின்று அநுபவிக்க வேணு மென்றிருக்க, அது பவபரிகரமான என் நெஞ்சைத் தன் பக்சலிலே இழுத்துக்கொள்வதே! ஐயோ! என்கிறார்: என்பர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். இந்த அநுபவத்தின் எதிரொலிதான்,

"ஐயோ! இவன் வடிவென்பதோர்

அழியா அழகுடையான்'

என்று கம்பன் வாக்கால் இராமபிரானின் அழகாக வடிவங் கொள்ளுகின்றது.

இங்ங்ணம் இறைவனின் எழிலை அகக் கண்ணாலும், புறக்கண்ணாலும் அதுபவித்த ஆழ்வார்,

12. அமலனாதி-9 - 13. கம்ப, அயோத், கங்கைப் படலம்-1