பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அரங்கநகர் அப்பன் I9

'கொண்டல் வண்ணனைக்

கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன் என்

உள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன்அணி

அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்(று)

ஒன்றினைக் காணாவே!"

என்று பாடி இப் பிரபந்தத்தைத் தலைக்கட்டுகின்றார். கொண்டல் வண்ணன்' என்பதில் இந்த ஆழ்வாரின் தாபம் தீர, விடாய் தீர அருள் பொழிந்த குறிப்பினைக் காணலாம். அழகிய மணவாளனின் திருமேனியில் முன்பு வீரப்பொலிவு சண்ட ஆழ்வார் இப்போது வெண்ணெயை யும் வெண்ணெய் போன்ற உள்ளங்களையும் களவாடிய கண்ணபிரானின் அழகுப் பொலிவினை அநுபவிக்கின்றார். உத்று நோக்கினால், வெண்ணெய் உண்ட திருப்பவளமாகக் காணப்படுகின்றது என்கின்றார். "என்னைச் சிந்தை கவர்ந்த வாயில் இப்போதும் வெண்ணெய் மணக்கின்றது, என்பது குறிப்பு. கூரத்தாழ்வான் தன்னுடைய சுந்தர பாஹ-ஸ்தவத்தில் பண்டு யசோதைப் பிராட்டி முத்தங் கொடுத்த கவடு இன்னும் அழகரின் திவ்விய கன்னங்களில் திகழா நிற்கும்என்று அநுபவித்தாற் போல, இவரும் பண்டு கண்ணன் வெண்ணெய் உண்ட முடை நாற்றம் இன்றும் பெரிய பெருமாள் திருப்பவளத்தில் கமழா நிற்பதாக அநுபவிக்கின்றார். தசரத சக்கரவர்த்தி தன்னுடைய அரச ஐசுவரியம் அனைத்தையும் அநுபவித்தற்கு எனக்கு ஒரு பிள்ளை வேணும் என்று நோன்பு நோற்றுப் பெருமான்ளைப் பெற்றாற்போல, ந ந் த கோ பனும்

14. அமலனாதி-10,