பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அறிவியல் தமிழ்

'கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய்பருக நந்தன் பெற்ற ஆனாயன்' என்று திருமங்கை மன்னன் வாக்கின் படி திருவாய்ப்பாடி பால்பண்ணை பாழ்போகவொண்ணா தென்று அச் செல்வத்தை அமுது செய்கைக்காக நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளையல்லவா கண்ணன்? ஞாலம் ஏழும் உண்டான்' என்று சொல்வதைவிட "வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளங் கவர்ந்தான்' என்று கூறுவதில் இந்த ஆழ்வாருக்கு முற்றிலும் மனநிறைவு.

இவர் பாடிய இந்த அமலனாதி பிரான்’ என்ற பிர பந்தத்தில் முதல் ஒன்பது பாசுரங்கள் அகக்கண் கொண்டு அருளியவை என்றும், பத்தாவது பாசுரம் புறக்கண்ணால் நேரில் கண்டு பாடப்பெற்றது என்றும் கொள்வர். என் அமுதினைக் கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே!" என்று இவர் பாடி முடித்ததும், அரங்கநகர் அப்பன் இவரை அளவற்ற பெருமகிழ்ச்சி நிலையில் அப்படியே அந்தத் திருமேனியுடன் ஏற்றுக் கொண்டானாம். ஆழ் வாரும் அனைவருங் காண அப்பிரானது திருவடிகளிலே காய்ந்த இரும்பு உண்ட நீராயினர். இராமாநுசர் போன்ற மெய்ஞ்ஞானியரும், கம்பன் போன்ற கவிஞர் களும் உச்சிமேல் கொள்ளத்தக்க சிறப்பு வாய்ந்தது இந்த ஆழ்வாரின் பிரபந்தம். இன்றும் திருப்பாணர் தமது திருவாக்கில் நம்மிடையே வாழ்கின்றார்.

'அம்புவியில் மதிள் அரங்கர்

அகம்புகுந்தான் வாழியவே!

அமலனாதி பிரான்பத்தும்

அருளினான் வாழியே!

15. பெரி திரு. 5.5:3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/22&oldid=534041" இலிருந்து மீள்விக்கப்பட்டது