பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. எழிலுடை இருசுடர் தோற்றம்

எல்லாம் வல்ல இறைவன் நமக்குப் புலன்களையும் துண்ணிய அறிவையும் அளித்து அவற்றின் துணை கொண்டு கோடானு கோடி இன்பங்களை நுகர்வதற்கு வாய்ப்பும் அளித்துள்ளான். இதனை எண்ணியே மகாகவி பாரதியார்,

"எத்தனைகோடி இன்பம் வைத்தாய்!-எங்கள் இறைவா! இறைவா! இறைவா!' என்று பாடித் திளைக்கின்றார். இங்ங்ணம் கூறிய கருத் தினை விளக்குவதுபோல்,

'சித்தினை அசித்துடன்

இணைத்தாய்;-அங்கு சேரும் ஐம் பூதத்து

வியன் உல(கு) அமைத்தாய்;" "அத்தனை உலகமும்

வண்ணக் களஞ்சியம் ஆகப் பலப்பலநல்

அழகுகள் சமைத்தாய்'

|சித்து-உயிர்; அசித்து-உயிரற்ற சடப்பொருள்)

என்து பின்னும் கூறுவர். நம் முன்னோர்கள் இயற்கையைக் கண்டுகளித்தே தமது வாழ்வைச் சிறப்பித்துக்கொண்டனர்

-- f

கலைக்கதிர் வெள்ளி விழா மலரில்(1974)வெளிவந்தது. 1. பாரதியார் கவிதைக்ள்-இறைவா!'இறைவர்!