பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழிலுடை இருசுடர் தோற்றம் 23

என்பதற்கு அவர்கள் இயற்றிய நூல்களே சான்றுகளாகும்’ அகன்ற நிலவான மும் அதில் துலங்கும் தாரகையும் தண் மதியும் நமக்கு இன்பத்தை அள்ளித் தெளிக்கக் காத்திருக் கின்றன. சண்ணுக்கு எட்டாத தொலைவில் மரகதத்தை உருக்கி வார்த்தாற்போன்று கண்கொள்ளாக் காட்சியளிக் கும் மாக்கடலைப் பார்த்த மாத்திரத்தில் நம்மிடையே தோன்றும் அகத்தெழுச்சிகட்கு எல்லையே இல்லை.

இந்நிலையில் அருமறையிலுள்ள ஒரு வாக்கியத்தில் நம் கருத்தினைச் செலுத்துவோம். 'வானத்தை அண்ணாந்து நோக்கினர்களா? என்ன எழில்? ஒரே நீலமாய் மேடுபள்ளம் இல்லாத தூய்மையால் விளை யாட்டுத் திடல் அப் பரந்த மைதானத்தில் இரண்டு குழந்தைகள் விளையாடுகின்றனர். குழவிகளின் மேனி யொளி கண்ணைப் பறிக்கின்றது; நம் உள்ளத்தையும் கொள்ளை கொண்டுவிடுகின்றது. நாடோறும் அக் குழந்தைகள் குண திசையிலிருந்து குட திசையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்க யாருக்குத்தான் ஆர்வம் பொங்கி எழாது?’ என்று வெங்கதிரோனையும் தண்மதியையும் வருணித்திருப்பது இயற்கையில் அவர்கள் கொண்ட மோகத்தைக் காட்டுகின்றதன்றோ? கதிரவனின் தோற்றமும் மறைவும், தண்மதியின் எழுகையும் அதன் மறைகையும் கவிஞர்கட்குப் பேரானந்தத்தை விள்ைவித் துள்ளன. அந்த இன்பமயமான சமாதியில், உறங்குகின்ற குழந்தையைத் தாய் அனைத்துக்கொண்டு கிடப்பதைப் போன்று, அச் சமாதி ஆலையாமல், தழுவுவர் அவர்கள். உறக்கம் கெடாமல் தாய் தன்னை மறந்துவிடுவதைப் போன்று அவர்களும் இன்பப் பெருக்கில் மிதப்பர். அவர்கள் அநுபவித்த இன்பப் பெருக்கில் ஒன்றிரண்டு திவலைகள் அவர்கள் பாடிய பாட்டுகளிலும் ஆடிய கூத்தி லும் இல்லாமற் போகாது. அவற்றைப் பார்த்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/25&oldid=534044" இலிருந்து மீள்விக்கப்பட்டது