பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 - அறிவியல் தமிழ்

வானத்தில் ‘கர, கர' வென்றுசுழன்றுமறையும்நிலையிலுள்ள வெய்யோன் என்பது கவிஞனின் அற்புதக் கற்பனை. கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர் கருது வதன் விளக்கத்தை நாம் கண்டு அநுபவிக்கின்றோம்.

பாஞ்சாலிக்குப் பகலவனின் பாங்செழிலை விளக்கும் பார்த்தன் மேலும் கூறுகின்றான்: "மின்னே, குட திசையில் தோன்றும் அற்புதக் காட்சிகளை அமைதியாகக் கண்டு களிப்பாயாக. முதலில் மின்னால் செய்யப்பட்ட வட்டினைக் காண்க. அதற்கு முன்னதாக பச்சை நிறமாகவுள்ள வட்டத்தையும் காண்பாய்; மின்வட்டினின்றும் எண்ணற்ற வயிரக் கால்கள் இடை இடையே எழுவதையும் காண்பாய். உமை அன்னை கவிதை செய்யத் தொடங்குகின்றாள். நாம் எழுந்து நின்று பல்லாண்டு வாழ்க!” என்று பல்லாண்டு பாடுவோம்" என்கின்றான்.

கவிஞனின் ஆனந்தக் களிப்பு அதன் கொடு முடியை எட்டுகின்றது. கதிரவனின் வடிவமும் மறை யும் நிலையில் உள்ளது. பார்த்தன் பாஞ்சாலியிடம் கொஞ்சிப் பேசுகின்றான். அன்பே, ஊன்றிக் கவனிப் பாயாக’ என்று கூறும் முறையில் செவ்வானத்தையும் அதில் காணப்பெறும் செந்நிற முகிற்படலங்களையும் சுட்டிக் காட்டியவண்ணம், “பரிதியைச் சூழ இருக்கும் படர்முகில்கள் தீப்பட்டெரிவதைக் காண்க. எத்தனை வடிவம்! எத்தனைக் கலவை! தீயின் குழம்புகளையும் செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகளையும் பார்ப்பா யாக, வெம்மை சிறிதும் தோன்றாது எரிந்திடும் தங்கத் தீவுகளைக் காண்க. இன்னொரு பக்கம் நீலப்பொய்கை கள் திகழ்வதைக் காண்க. அந்த நீலத்திலும் எத்தனை வகை! எத்தனை விதமான கலவைகள்! நீலப் பொய் கையில் மிதந்திடும் தங்கத்தோணிகளைக் கண்கொண்டு பார்க்க. இன்னொரு பக்கம் பொற்கரையிட்ட கருஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/30&oldid=534049" இலிருந்து மீள்விக்கப்பட்டது