பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எழிலுடை இருசுடர் தோற்றம் 29

சிகரங்கள் காட்சியளிப்பதைக் காண்க, பிறிதொரு பக்கம் தங்கத் திமிங்கலம் மிதக்கும் இருட்கடலைக் கண்டு களிப்பாயாக. எங்கு நோக்கினும் ஒளித்திரள்! ஒளித்திரள்! வண்ணக் களஞ்சியம்!” என்று கூறுவதில் கவிஞனின் எக்களிப்பைக் காணலாம்,

முழுமதிய உதயம் : வெங்கதிரோன் உதயக் காட்சி யையும் அவன் மறையும் காட்சியையும் கண்டுகளித்த நாம் கடலிடையே முழுமதியம் எழும் காட்சியையும் அது நிலாக் கற்றையை எம் மருங்கும் வீசி நிற்கும் காட்சியையும் கண்டு அவற்றில் ஆழங்கால் படுவோம். மீண்டும் கம்பனின் கலைக் கோயிலுக்கு வருகின்றோம். கவிஞனின் கற்பனையில் எழுந்த ஒரு திவலை இது:

'பெருந்திண் நெடுமால் வரைநிறுவிப்

பிணித்த பாம்பின் மணித்தாம்பின் விரிந்த திவலை யுதிர்த்தமணி

விசும் பின் மீனின் மேல் விளங்க அருந்த அமரர் கலக்கியநாள்

அமுது நிறைந்த பொற்கலசம் இருந்த திடைவந் தெழுத்ததென

எழுந்தது ஆழி வெண்திங்கள்'."

1நெடுமால்-திரிவிக்கிரம அவதாரம் செய்த திருமால்; வரை-மந்தர மலை; பாம்பு-வாசுகி; தாம்பு-கயிறு திவலை. நீர்த்துளி; விசும்பு-வானம்; மீன்-நட்சத்திரங்கள்; கலசம்பாத்திரம்; ஆழி-கடல்; திங்கள்-சந்திரன்).

திருமால் தேவர்கட்காக அமுதம் பெறச் செய்த ஏற் பாட்டை நமக்கு முதலில் நினைவுறுத்துகின்றான் கவிஞன். இறவாத நிலையைப் பெறுவான் வேண்டி தேவர்கள் அமுதம் பெற எண்ணுகின்றனர். மந்தர மலையை

5. கம்பரா. பாலகா, மிதிலைக் காட்சி-70,