பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எழிலுடை இருசுடர் தோற்றம் 31

செந்தாமரை முகை தோன்றிற்று. நான்முகன் வண்டாக நின்று நான்மறைகளைப் பாட அம் முகை மலர்ந்தது. திருமாலின் திருவுந்திக் கடல் ஒரு செந்தாமரை மலரைப் பூத்தது கண்டு கருங்கடலும் ஒரு வெண்டாமரையைப் பூத்தது போல் அக்கடலில் சந்திரன் தோன்றினான். இவ்வுலகில் ஒருவர் ஒரு செயலை மேற்கொண்டால் பிறரும் அது போன்ற தொன்றை விரும்பிச் செய்தலும், அங்ங்ணம் செய்யுங்கால் சிறிது வேறுபாடு காட்டுதலும் உலகத்தாரது தன்மை யாதலின், உந்திக் கடல்போல் செந்தாமரை பூவாது வெண்டாமரை பூத்தது என்ற நயம் தோன்ற உரைத்தான் கவிஞன். கலை நிறைந்த சந்திரமண்டலம் இதழ் விரிந்த வெண்டாமரை மலரை யொத்து நின்றது. தாமரை பூப்பது நீர்நிலையிலாதலின், உந்தி கடலாகக் கொள்ளப்பெற்றது.

நிலாக்கற்றை பாவுதல் : முழுமதியம் வீசும் கதிர்கள் பரவும் தன்மையைக்காட்டும் கவிஞனின் மதிநுட்பம் போற்றத்தக்கதாக அமைகின்றது. புள்ளிகளை அடை யாளம் இட்டதுபோல் மினுக்மினுக்கென்று விண்மீன்கள் ஒளிர்கின்ற வானத்தில், எம்மருங்கும் இருள் கவிந்து நிற்கின்றது. மதியினின்று கிளம்பும் நிலாக் கற்றை நாற்புறமும் கவிந்து நிற்கும் இருட் படலத்தை நக்கி உலர்கின்றது. சந்திரனின் இருப்பும் அதிலிருந்து புறப்படும் கதிர்களும் ஒர் அழகான கற்பனை மூலம் விளக்கப் பெறுகின்றன. கீழ் வானத்தில் எழிலுடன் அமைக்கப் பெற்றுள்ளது ஒரு மேடை, அதன் மீது வெள்ளி மயமான பூர்ண கும்பம் வைக்கப்பெறுகின்றது. அந்தக் கும்பத்தில் இலிங்கமுகப் பாளை விரித்து வைக்கப் பெறுகின்றது. மங்கல நிகழ்ச்சிக்கு அடையாளமாக வைக்கப்பெறும் பூர்ணகும்பம்போல் காட்சியளிக்கின்றது. கீழ் வானத்தில் உதயமாகும் முழுமதியம்,