பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3? அறிவியல் தமிழ்

இதனை அடுத்று நிலாகற்றை பரவும் நேர்த்தியை விளக்கக் கவிஞன் கூறும் கற்பனை ஒவியம் தம் உள் ளத்தைப் பிணித்து நிற்கின்றது. அந்த இன்னமுத ஒவியம் இது :

"நீத்தம் அதனில் முளைத்தெழுந்த

நெடுவெண் திங்கள் எனும்,தச்சன் மீத்தன் சுரங்கள் அவை பரப்பி

மிகுவெண் நிலவாம் வெண்சுதையால் காத்த கண்ணன் மணியுந்திக்

கமல நாளத் திடைப் பண்டு பூத்த அண்டம் பழையதென்று

புதுக்கு வானும் போன்றுளதால்."

(நீத்தம்-கடல்வெள்ளம்; திங்கள்-சந்திரன்; தச்சன். சிற்பி, கண்ணன்-திருமால்; உந்தி-நாபி, பண்டு-முன்பு: பூத்த-தோன்றின; சுரங்கள்-கிரணங்கள்; பரப்பி-பரவச் செய்து; கதை-சுண்ணச் சாந்து.)

பழைய காலத்தில் திருமாலின் திருவுந்திக் கமலத்தில் தோன்றின. இந்த அண்டகோளமாகிய வீடு மிகவும் பழைய தாகிவிட்டது என்று கருதுகின்றான் கடல் வெள்ளத்தில் உதித்து மேலெழுத்த நெடுவெண் திங்கள் என்னும் சிற்பி. உடனே அவன் அதனைப் புதுப்பிக்க நினைக்கின்றான். தன் கதிர்களாகிய கைகளை நாற்புறமும் பரப்பி வெள்ளிய நிலாவாகிய வெண்ணிறமுள்ள சுண்ணச் சாந்தினால் புதுப் பிக்கின்றான். சிற்பி வீட்டிற்கு வெள்ளையடிப்பதுபோல் நிலாக் கற்றை நாற்புறமும் பரவி நிற்கின்றது என்று கூறும் கவிஞனின் கற்பனை கற்போர் கருத்தைக் கவர்கின்ற தன்றோ?

6, தம்பரா. பாலகா, மிதிலைக் காட்சி-74,