பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழிலுடை இருசுடர் தோற்றம் 33

புரட்சிக் கல் காட்டும் முழு மதியம்: இங்ஙனம் முழு மதியத்தில் பேரழகில் ஈடுபடுகின்றனர் கவிஞர்கள். இக் காலக் கவிஞர் ஒருவர் அந்த அழகில் ஈடுபடுவதைக் காண்போம். காதல் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஒரு கவிஞன் வாயில் வைத்தே பேசுகின்றான் கவிஞன்.

'நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து

நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தைக் கோல முழுதும் காட்டிவிட்டால் காதல்

கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!

சொக்கவெள்ளிப் பாற்குடமோ? அமுத ஊற்றோ? காலைவந்த செம்பரிதிக் கடலில் மூழ்கிக்

கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பி ழம்போ'."

(வான்-ஆகாயம்; கோலம்.அழகு; சொக்க வெள்ளிகலப்படமற்ற வெள்ளி; பரிதி-சூரியன்; கனல்-சூடு.)

இங்குக் கவிஞன் சந்திரனை ஒரு பெண்ணாக உருவகிக் கின்றான். அந்தப் பெண் நீல ஆடை புனைந்து உடலை யெல்லாம் மறைத்துக் கொண்டு முகத்தை மட்டிலும் வெளிக் காட்டுகின்றாள். அவளுடைய முழு அழகையும் காட்டி விட்டால் அவள் காதல் வெள்ளத்தில் உலகம் இறந்துபடுமோ என்று வினவுகின்றான். 'சந்திரனே, நீ வானச் சோலையில் பூத்த ஒரு தனிப் பூவோ? பாவமுதம் நிறைந்த சொக்க வெள்ளிக்குடமோ? அமுத ஊற்றோ? காலையில் கனன்று எழுந்த செவ்விய சூரியன் கடலில் மூழ்கி வெப்பத்தை இழந்து தண்ணொளி வீசும், ஒளிப் பிழம்பாக வடிவெடுத்ததோ?' என்று நேருக்கு நேர் பேசுவது நம்மைக் கிளர்ந்தெழச் செய்கின்றது. பிள்ளைத் தமிழ்க் கவிஞர்கள்

7. பாரதிதாசன்-புரட்சிக்கவி',

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/35&oldid=534054" இலிருந்து மீள்விக்கப்பட்டது