பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 அறிவியல் தமிழ்

'அம்புலிப் பருவத்தில் அமைத்துக் காட்டும் கற்பனையெல் லாம் ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தைக் காட்டி நிற்பதாகும்.

இங்ங்ணம் கவிஞர்கள் இருசுடர் தோற்றத்தை' இன்பம் ததும்ப எடுத்துக் காட்டியுள்ளனர். உள்ளக் கனிவுடன் பாடல்களை நுகர்பவர்கட்குத்தான் இந்த இன்பம் தட்டுப்படும். இளமையிலிருந்தே நல்ல முறையில் தரப்பெறும் இலக்கியப் பயிற்சியாலேயே இக் கனிவு பிறக்கும். இக் கனிவு பெற்றால் உலகில் எல்லாவற்றையும் இன்பமாகக் காணும் ஆற்றல் தோன்றக்கூடும். துன்பக் கடல்போன்ற இவ்வுலகில் இத்தகைய பாடல்கள் மம்மர் அறுக்கும் மருந்தாக இருந்து அவ்வப்பொழுது சிறிதளவு விண்ணுலக இன்பத் தேன் துளிகளைப் பிலிற்றி நம்மைத் தேற்றி நிற்கின்றன.