பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. அணுவில் ஆனந்தக் கூத்து

"கற்பனை கடந்த சோதி

கருணையே புருவ மாகி அற்புதக் கோலம் நீடி

அருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பர வியோம மாகும்

திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடஞ்செய் கின்ற

பூங்கழல் போற்றி போற்றி”.*

-சேக்கிழார்

'அண்டத்தில் போலத்தான் பிண்டத்திலே’ என்பது நமது நாட்டில் வழங்கிவரும் பழமொழி. இந்தப் பழமொழி யின் உண்மையினை அணுவாராய்ச்சியின் முடிபாக இருப்பதை அறிவியலறிஞர்கள் காட்டியுள்ளனர். அணுவின் அமைப்பும் அண்டத்தின் அமைப்பும் ஒப்புடையனவாக உள்ளன என்று அவர்கள் ஆய்வுகளால் மெய்ப்பித்து விட்டனர்.

இந்த உலகில் 92 வகை அணுக்கள் உள்ளன என்றும், இந்த அணுவகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றன என்றும், இவை யாவும் தம்மோடு தாமாகச் சேர்ந்து அணுத்திரளைகள் (Molecules) ஆகின்றன என்றும் இப்படிப்பட்ட அணுத்திரளைகளாலான சேர்க்கைப் பொருள்கள் (Compounds) ஏழு இலட்சத்திற்கு மேலும் உள்ளன என்றும் அவர்கள் விளக்கிக் கூறிக் கணக்கிட்டும்

1. திருத்தொண்டர் புரா-தில்லைவாழந்தனர்.12.